Last Updated : 01 Jul, 2019 11:46 AM

 

Published : 01 Jul 2019 11:46 AM
Last Updated : 01 Jul 2019 11:46 AM

மற்றொரு ஐஏஎஸ் தமிழரை தன் மாவட்டத்தில் உயர்அதிகாரியாக அமர்த்திய உபி முதல்வர் யோகி

மற்றொரு ஐஏஎஸ் தமிழரை தன் மாவட்டமான கோரக்பூரில் உயர் அதிகாரியாகப் பதவியில் அமர்த்தியுள்ளார் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத். கரூரை சேர்ந்த ஏ.தினேஷ்குமார்.ஐஏஎஸ், கோரக்பூர் வளர்ச்சி ஆணையத்தின் உபதலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.

உபி மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சிறப்புச் செயலாளராகவும், அதே துறையின் கவுன்சில் இயக்குநராகவும் இருந்தவர் தினேஷ்குமார். இவர் தம் துறையில் அநாவசியமான செலவீனங்களை தடுத்து உபி அரசிற்கு வருவாயை பெருக்கி உள்ளார்.

இத்துறையில் அவர் மேலும் செய்த பல சீர்திருத்தப் பணிகள் அபி அரசிகு அதிகப் பலனை தந்தது. இதனால், தினேஷ்குமாரின் பணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பாராட்டை பெற்றது.

இதனால் தினேஷ்குமாரின் திறமையை தம் சொந்த மாவட்டத்தில் பயன்படுத்த முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த தினேஷ்குமாரை தற்போது கோரக்பூரின் வளர்ச்சி ஆணையத்தின் உபதலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.

இதுபோல், பாஜக ஆளும் உபியில் அதன் முதல்வர் யோகி தமிழகத்தை சேர்ந்த அதிகாரியை தம் சொந்த மாவட்டத்தில் அமர்த்துவது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச்சில், கோரக்பூரின் மாவட்ட ஆட்சியராக ஆம் ஆண்டு 2008 ஆம் ஆண்டு பேட்ச்சின் ஐஏஎஸ் அதிகாரியான கே.விஜயேந்திர பாண்டியனை அமர்த்தி இருந்தார்.

இதுபோல், மேலும் பல தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் முதல்வர் யோகி அமர்த்தி உள்ளார். இதற்கு அவர்களது தனித்திறமையால் யோகி கவரப்பட்டது காரணமாகக் கருதப்படுகிறது.

உபியின் மேற்குப்பகுதியில் கிரிமினல் நடவடிக்கைகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்களாக இரண்டு தமிழர்கள் பணியாற்றுகின்றனர். இதில், ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் பரேலியிலும், புலந்த்ஷெஹரில் டாக்டர்.என்.கொளஞ்சியும் அதிரடியாகப் பணிசெய்கின்றனர்.

இவர்களில், முனிராஜ், மதக்கலவரத்தை தடுக்க பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்து ‘பரேலியின் சிங்கம்’ என உ.பி.வாசிகளால் பாராட்டப்பட்டவர். இதே பரேலியில், மற்றொரு தமிழராக முனிசிபல் மாநகராட்சியின் முதன்மை ஆணையராக என்.சாமுவேல் பால்.ஐஏஸ் பணியாற்றுகிறார்.

தியோபந்தின் உலகப் புகழ்பெற்ற தாரூல் உலூம் உள்ளிட்ட நூற்றக்கணக்கான மதரஸாக்கள் உள்ள முக்கிய மாவட்டமான சஹரான்பூரிலும் தமிழரான பி.தினேஷ்குமார்.ஐபிஎஸ், மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளராக உள்ளார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சுல்தான்பூர் மாவட்டத்தின் ஆட்சியராக தமிழரான இந்துமதி.ஐஏஎஸ் அமர்த்தப்பட்டுள்ளார். அமேதி, ரேபரேலி அருகிலுள்ள சுல்தான்பூர் தொகுதியின் எம்பியாக இருப்பவர் மேனகா காந்தி.

உபியில் தமிழகத்தை சேர்ந்த 7 ஐபிஎஸ் மற்றும் 14 ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x