Last Updated : 01 Jul, 2019 12:00 AM

 

Published : 01 Jul 2019 12:00 AM
Last Updated : 01 Jul 2019 12:00 AM

தமிழகம் உட்பட நாடு முழுவதும் நிலத்தடி நீர் சுரண்டல் அதிகரிப்பு: புள்ளிவிவரத்தில் அதிர்ச்சி தகவல்

நிலத்தடி நீர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கத்தாரியா கடந்த வியாழக்கிழமை பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது, சுத்தமான நீரின் தேவை அதிகரித்திருப்பது, பருவ மழையில் மாற்றங்கள், மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

நாட்டில் 52 சதவீத கிணறுகள் கண்காணிக்கப்பட்டு வந்ததில், அவற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பதினாறு சதவீத தாலுகா, மண்டலம், வட்டாரங்களில் நிலத்தடி நீர், அளவுக்கதிகமாக சுரண்டப்பட்ட நிலையில் உள்ளன. 4 சதவீத பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

நாடு முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 17 மாநிலங்களைச் சேர்ந்த 6,584 தாலுகா, மண்டலம் ஆகியவற்றில் நடத்திய ஆய்வில், 4,520 பகுதிகள் பாதுகாப்பான பிரிவின் கீழ் வருகின்றன. 1,034 பகுதிகள் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பிரிவின் கீழ் உள்ளன.

நாட்டில் ஏறக்குறைய 681 தாலுகா, மண்டலம், வட்டாரங்கள் (10 சதவீதம்) மிதமான மோசம் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. 253 பகுதிகள் மோசமான பிரிவின் கீழ் உள்ளன. ஒரு சதவீத பகுதி உப்பு நீராக உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை, கடந்த 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

நிலத்தடி நீர் பஞ்சாப் (76 சதவீதம்) மாநிலத்தில் அதிகமாக உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலைகளில் ராஜஸ்தான் (66), டெல்லி (56), ஹரியாணா (54) மாநிலங்களில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், உத்தராகண்ட், திரிபுரா, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர், காஷ்மீர், அசாம், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் அளவுக்கதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படவில்லை.

அருணாச்சல், அசாம், கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிகோபர், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாப்பான நிலையில் உள்ளது.

இவ்வாறு இணை அமைச்சர் கத்தாரியா கூறினார்.

தமிழகத்தின் நிலை

தமிழகத்தைப் பொறுத்த வரையில் வட்டார அளவில் (பிளாக்) அதிகபட்சமாக 358 பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்டுள்ளது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x