Published : 02 Jul 2019 04:18 PM
Last Updated : 02 Jul 2019 04:18 PM

வயலில் இறங்கி நாற்று நட்ட கேரள பெண் எம்.பி.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம்  குன்னமங்கலத்தைச் சேர்ந்த தலித் பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் (வயது 32). நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது தலித் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். மேலும் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒரே பெண் எம்.பி. இவர்தான். இவரது தந்தை ஹரிதாஸ் தினக் கூலி. தாய் ராதா கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக பணியாற்றியவர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் இருந்த ரம்யா, பின்னர் குன்னமங்கலம் பஞ்சாயத்துத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தற்போது எம்.பி.யான பிறகும் தனது விவசாய ஆர்வத்தை கைவிடவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தனது விவசாய நிலத்தை உழுது தயார் செய்துள்ளார். பின்னர் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து அவரே நாற்று நட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

காங்கிரஸ் எம்.பி. ரம்யாவின் விவசாய ஆர்வத்தை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x