Published : 04 Jul 2019 09:03 PM
Last Updated : 04 Jul 2019 09:03 PM

பொதுப்பணித்துறை பொறியாளரைக்  கட்டி வைத்து அவர் மீது சேற்றைக் கொட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

மத்தியப் பிரதேசத்தில் ஆகாஷ் விஜய்வார்கியா என்ற எம்.எல்.ஏ. அரசு அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதேஷ் ராணே என்பவர் பொதுப்பணித்துறை பொறியாளர் பிரகாஷ் ஷெடேகர் என்பவரை கட்டி வைத்து அவர் தலையில் சேற்றை வாரிக் கொட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால் இம்முறை எம்.எல்.ஏ.நிதேஷ் ராணேபோலீஸாரால் கைது செய்யப்பட்டார். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது சேறும் சகதியுமாக உள்ளது, மக்கள் இதில் புதிரான குண்டு குழிகளையும் கடந்து சென்று வருகிறார்கள் நீங்களும் அந்த வேதனையை அனுபவியுங்கள் என்று எம்.எல்.ஏ.ராணே அவர் மீது சேற்றைவாரிக் கொட்டிய போது பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ராணே இவர் பாஜக ராஜ்ய சபா எம்.பியும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான நாராயண் ராணேயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  நிதிஷ் ராணேயும் மற்றும் சிலரும் சேர்ந்து பிரகாஷ் ஷெடேகர் என்ற அந்த அதிகாரியை பாலத்தில் கட்டி வைத்து அவர் மீது சேற்றை வாரி கொட்டியுள்ளனர்.  மும்பை -கோவா பாதையில் கட்நாதி நதிப் பாலத்தின் மீது இந்த அசிங்கமான சம்பவம் நடந்துள்ளது.

 

பாலத்தில் கட்டி வைத்து அவரிடம் ஏன் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை ஏன் சாலைகள் ஒழுங்காகப் போடவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பொறியாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நிதேஷ் ராணேயை கைது செய்துள்ளனர். நிதேஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x