Last Updated : 02 Jul, 2019 12:00 AM

 

Published : 02 Jul 2019 12:00 AM
Last Updated : 02 Jul 2019 12:00 AM

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராம் விலாஸ் பாஸ்வான்

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய அமைச்சராக உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் மக்களவை உறுப்பினராக இருந்த இவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு இடைத் தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதுபோல ஒடிசா மாநிலம் சார்பில் பிஜு ஜனதா தளம் ஆதரவுடன் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்வினி வைஷ்ணவும் பதவியேற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x