Last Updated : 29 Jun, 2019 10:40 AM

 

Published : 29 Jun 2019 10:40 AM
Last Updated : 29 Jun 2019 10:40 AM

பெங்களூருவில் அமலுக்கு வந்தது: போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ. 1000 அபராதம்

கர்நாடக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது:

பெங்களூருவில் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (முன்பு 100 ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் விதிக்கப்பட்டவர் மீண்டும் இந்த செயலை செய்தால் ரூ.2000 வசூலிக்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ரூ.500 அதிகமாக செலுத்த வேண்டும்.

மாநகர எல்லையில் அனுமதிக் கப்பட்ட வேகத்தை காட்டிலும் கூடு தல் வேகத்தில் வாகனம் ஓட்டி னால் ரூ.2000 (முன்பு ரூ.1000), உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதல் முறை ரூ.2,000 (முன்பு ரூ.1000), இரண்டாம் முறை ரூ.5,000 அப ராதம் செலுத்த வேண்டும். வாக னம் நிறுத்தக் கூடாத பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,650 (முன்பு 350 ரூபாய்) அபராதம் வசூலிக்கப்படும்.

மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.2000 அல்லது 6 மாத சிறை, இரண்டாம் முறை ரூ.5000 அல் லது 2 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்படும். இதற்கான அபராதத்தை நேரடியாக நீதிமன் றத்தில் செலுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறை மீறலுக் கான அபராதத்தை ரொக்கமாக மட்டுமின்றி, வங்கி அட்டைகள் மூலமாகவும் செலுத்தலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x