Published : 03 Aug 2017 08:09 AM
Last Updated : 03 Aug 2017 08:09 AM

மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே இரட்டை மின்சார ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி இடையே இரட்டை மின்சார ரயில்பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி நேற்று கூடியது. இதில் மதுரை-வாஞ்சி மணியாட்சி- தூத்துக்குடி இடையே இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்க ஒப்புதல் தரப்பட்டது. இந்த பாதையின் நீளம் 160 கி.மீ. இந்த திட்டத்துக்கான செலவு ரூ.1,182.31 கோடி. ஆண்டுக்கு 5% செலவு கூடுதலாக கணக்கிடப்பட்டு ரூ.1,272.51 கோடியாக மதிப் பிடப்பட்டுள்ளது. 4 ஆண்டு களில் 2020-21க்குள் இத்திட்டம் முடிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இத்திட்டத் தின் கட்டுமானம் மூலம் 38.40 லட்சம் மனித வேலை நாட்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாகும்.

இந்த திட்டத்தால் சரக்குகள் விரைவாக கொண்டு செல்லப் படுவதுடன் பயணிகள் ரயில் களும் விரைவாக செல்ல முடியும். அதோடு, எதிர் காலத்தில் அதிகரிக்கும் கூடுதல் போக்குவரத்து தேவையையும் சமாளிக்க முடியும்.

இதேபோல, கேரளாவின் திருவனந்தபுரம் தமிழகத்தின் கன்னியாகுமரி இடையே இரட்டை மின்சார ரயில்பாதை அமைக்கவும் கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்த பாதையின் நீளம் 86.56 கி.மீ. இந்த திட்டத்துக்கான செலவு ரூ.1,431.90 கோடி. ஆண்டுக்கு 5% செலவு கூடுதலாக கணக் கிடப்பட்டு ரூ.1552.94 கோடியாக மதி்ப்பிடப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறை வேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இந்த திட்டத்தால் 20.77 லட்சம் மனித வேலை நாட்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாகும். இந்த பாதை யில் பயணிகள் அதிக அளவில் செல்வ தால் பயணிகளுக்கு வசதியாக இருப்ப தோடு, அருகில் உள்ள துறைமுகங் களுக்கும் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல முடியும்.

இதேபோல, வாஞ்சி மணியாச்சி நாகர்கோயில் இடையே திருநெல்வேலி வழியாக இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் பாதையின் மொத்த நீளம் 102 கி.மீ. இத்திட்டத்துக்கான செலவு ரூ.1003.94 கோடி. ஆண்டுக்கு 5% கூடுதலாக செலவு கணக்கிடப்பட்டு ரூ.1,114.62 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-21-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப் படும் என்று தெரிகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும்போது 24.48 லட்சம் மனிதவேலை நாட்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x