Last Updated : 17 Aug, 2017 08:08 PM

 

Published : 17 Aug 2017 08:08 PM
Last Updated : 17 Aug 2017 08:08 PM

ஊழலை வேரோடு அழிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி திட்டவட்டம்

நிறுவனமயமாக்கப்பட்டு, சமூகத்தில் ஊறிப்போன ஊழலை வேரோடு அழிக்க மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று 200 ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர் ‘சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச்’ கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குரூப் 3, குரூப் 4 ஊழியர்களுக்கான நேர்காணல் முறையை ரத்து செய்ததால் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித்தரும் இடைத்தரகர்கள் ஒழிந்து விட்டதாக மோடி தெரிவித்தார்.

நிதி ஆயோக் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

ஊழல் நிறுவமனமயமாக்கப்பட்டுள்ளது நாட்டின் துரதிர்ஷ்டம். இதற்கு எதிர்-நிறுவன ஏற்பாடுகளை செய்யாவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது. இடைத்தரகர்களுக்கு இப்போது வேலையில்லை, இவர்கள்தான் வேலையின்மை என்று தற்போது கூக்குரலிடுகின்றனர்.

அரசும் அதன் முயற்சிகளும் மட்டுமே புதிய இந்தியாவைப் படைக்க போதுமானதல்ல. மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமக்களிடமிருந்தும் வர வேண்டும்.

முன்பு பத்ம விருதுகள் எப்படி அளிக்கப்பட்டு வந்தன? நாங்கள் ஒரு ‘சிறிய’ மாற்றம்தான் கொண்டு வந்தோம், விருதுகளுக்கு மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம். இது கடந்த காலத்தில் இல்லை.

நாம் ஒவ்வொருவருமே தேசப்பற்று உடையவர்களே, இந்தியா புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்று விரும்புபவர்களே. தேசத்தின் மீதான பற்றுதலில் நம்மிடையே வித்தியாசம் கிடையாது.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x