Last Updated : 18 Aug, 2017 06:29 PM

 

Published : 18 Aug 2017 06:29 PM
Last Updated : 18 Aug 2017 06:29 PM

பாசிச சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் ஒன்றிணைவது அவசியம்: டி.ராஜா வலியுறுத்தல்

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச, வலதுசாரி சக்திகளை எதிர்கொள்ள இடதுசாரிகள் ஒன்றிணைவது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்

மும்பையில் லால் நிஷான் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவதைக் குறிக்கும் கூட்டத்தில் டி.ராஜா இதனை வலியுறுத்தினார்.

“லால் நிஷான் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவது ஒரு நம்பிக்கையான முன்னேற்றம். பிற இடதுசாரிகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற வலதுசாரி பாசிச சக்திகள் விடுக்கும் சவால்கள் குறித்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து பாஜக-வை எதிர்க்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலை கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் நெருக்கமாவதை வலியுறுத்துகிறது. அதன் அடையாளமாகவே எல்.என்.பி. கட்சி சிபிஐ-யுடன் இணைந்துள்ளது” என்றார் டி.ராஜா.

சிபிஐ கட்சியின் மாநில செயலாலர் பாலசந்திர காங்கோ இந்த இணைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கூறியபோது, “எல்.என்.பி, எங்களை விட்டு அப்போது சென்றது, ஆனால் மார்க்சியத்திற்கான கடப்பாடு மாறவில்லை. எந்த ஒரு நிபந்தனையுமின்றி சிபிஐ-யுடன் எல்.என்.பி. இணைந்தது மிகப்பெரிய விஷயம். எனவே ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே ஏன் ஒற்றுமை ஏற்படக்கூடாது?” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x