Published : 11 Apr 2014 07:11 PM
Last Updated : 11 Apr 2014 07:11 PM

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா நியமனம்

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் இப்போது பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிகிறது.

புதிய தலைமை நீதிபதி ராஜேந்திர மல் லோதா (64), ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக 2008-ம் ஆண்டு நியமனம் பெற்றார். தற்போது நாட்டின் உயர்ந்த பொறுப்பான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். 5 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x