Last Updated : 22 Jul, 2017 04:43 PM

 

Published : 22 Jul 2017 04:43 PM
Last Updated : 22 Jul 2017 04:43 PM

மூளை அறுவை சிகிச்சையின் போது கிடார் மீட்டிக்கொண்டிருந்த இசைக்கலைஞர்

மூளையில் அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே தன் கையில் கிடார் இசைக்கருவியை பிடித்தவாறே அதை மீட்டிக்கொண்டிருந்தார் ஓர் இசைக்கலைஞர்.

தனது முதல் ஆல்பத்தை அடுத்தஆண்டு வெளியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தகவல்தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டுவந்த பெங்களூரு இசைக்கலைஞர் அபிஷேக் பிரசாத் தற்போது இசையே லட்சியமாக வாழ்ந்துவருகிறார்.

சமீப காலமாக இசைக்கலைஞர்களுக்குகே வரும் மூளையில் ஒருபக்க தசைபிடிப்பு நோயினால் அவர் அவதியுற்று வந்தார். இந்நோய், தற்செயலான தசை சுருக்கங்களை ஏற்படுத்தி சில உறுப்புகளை முடக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தக் கூடியது.

இசைக்கலைஞர் பிரசாத்துக்கு ஏற்பட்டுள்ள நோய் எப்படிப்பட்டதென்றல், கிடார் மீட்டிக்கொண்டிருந்தபோதே இசைக்கருவியின் நரம்புக்கிடையில் சிக்கி இடது கையின் மூன்று விரல்களும் முடங்கிவிட்டன.

ஒரு இசைக்கலைஞனுக்கு விரல்கள்தான் ஆதாரம். தன் விரல்கள் பாதிப்பினால் கிடாரை தொடமுடியாதவராக அந்நியப்பட்டுவந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வியாழன் அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை ஏழுமணிநேரம் நடந்தது. அப்போது அவரது மூளையிலுள்ள பிரச்சனைகளை அடையாளம் மருத்துவர்கள் இனங்கண்டனர்.

திரு. பிரசாத் வியாழன் அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் தனது ஏழு மணிநேர அறுவை சிகிச்சையின் போது முழுமையாக விழித்திருந்தார். அப்போது மருத்துவர்கள் அவரது மூளையில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணத்தக்க வகையில் அவர்களுக்கு கிடார் மீட்டிக்கொண்டேயிருந்தார் அவர்.

''மருத்துவர் என்னிடம் கூறினார், நீங்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு கிடாரைக் கொண்டுவரவேண்டும். அறுவைச் சிகிச்சையின்போது நீங்கள் அதை மீட்ட வேண்டும். அப்போது உடனுக்குடன் உங்கள் உணர்வுகள் எப்படி மாறுகின்றன என்பதையும் தொடர்ந்து நீங்கள் தெரிவிக்கவேண்டும் என்றும் மருத்துவர் கேட்டுக்கொண்டார்.'' என்பதை தனது உரையாடலை நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஷரண் ஸ்ரீனிவாசனுடன் பேசிக்கொண்டே இதை அபிஷேக் தெரிவித்தார் தெரிவித்தார்.

ஐடி துறை சார்ந்த தனது வேலையை 2012ல் விட்டுவிட்டு, ஒரு இசைக்கலைஞராக ஆக வேண்டுமென்ற கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். இசை ஆல்பம் வெளியிடுவதே முதல்கட்ட பணி என்பதால் அதற்கான வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தடைகளைத் தாண்டி இன்னும் ஒரு வருட காலத்தில் வெற்றிகரமாக முதல் இசை ஆல்பம் வெளியிடும் நம்பிக்கை மிளிர்ந்தது அவரது கண்களில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x