Last Updated : 26 Jul, 2017 08:50 PM

 

Published : 26 Jul 2017 08:50 PM
Last Updated : 26 Jul 2017 08:50 PM

கைப்பற்றப்பட்ட படகுகளுக்காக மீனவர்களுக்கு நிதி உதவி: கனிமொழி கேள்விக்கு அமைச்சர் பதில்

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளால் கைப்பற்றப்பட்ட மீன் பிடி படகுகளுக்காக தமிழக மீனவர்களுக்கு நிதி அளிக்கப்படும் என மத்திய விவசாயம் மற்றும் விவசாயநலனுக்கான இணை அமைச்சர் சுதர்சன் பகத் தெரிவித்துள்ளார். இன்று மாநிலங்களவையில் கனிமொழி எழுப்பிய கேள்விக்க பதிலாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.:

தனது பதிலில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்கான அமைச்சர் திரு சுதர்சன் பகத் கூறியதாவது:

மத்திய கால்நடை, பால் வளம், மீன் வளம் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சகம், நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கான உதவி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அத்திட்டத்தின் கீழ், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு பயன்படும் படகுகள் வாங்குவதற்காக, அதன் விலையில் 50 சதவிகிதம் வரையிலும், அதிகபட்சமாக 40 லட்ச ரூபாய் வரையிலும் நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டம் மீனவ கூட்டுறவு சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், மீன் பிடி சங்கங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படுவதாகவும், அதில் இலங்கை அரசிடம் மீன் பிடிப் படகுககளை பறிகொடுத்த, தமிழக மீனவர்களுக்கும் உதவி செய்யப்படுகிறது என்று கூறினார்.

முன்னதாக, இந்திய மீனவர்களின் படகுகளை, பாகிஸ்தான் கைப்பற்றியதற்கு பதிலாக, புதிய மீன் பிடிப் படகுகளை வழங்குவது குறித்து 2017-18 நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இது வரை எத்தனை படகுகள் வழங்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதே போல, இலங்கை அரசால்

கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு பதிலாக புதிய படகுகள் வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x