Last Updated : 07 Jul, 2017 10:36 AM

 

Published : 07 Jul 2017 10:36 AM
Last Updated : 07 Jul 2017 10:36 AM

விவசாயிகள் தற்கொலை பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது: பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றம் கருத்து

அதிகரித்துவரும் விவசாயிகளின் தற்கொலை பிரச்சினைக்கு ஓர் இரவில் தீர்வு கண்டுவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

அதேநேரம் விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு நலத்திட்டங்களால் பலன் கிடைக்க ஓராண்டாவது காத்திருக்க வேண்டும் என்ற அட்டர்னி ஜெனரலின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

வறுமை, பருவமழை பொய்த்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்கக் கோரி ‘கிராந்தி’ எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார்.

அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும்போது, “மத்தியில் ஆளும் தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசால் விவ சாயிகளுக்கு பல்வேறு நலத்திட் டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்க ஓராண்டாவது காத் திருக்க வேண்டும்.

பசல் பீமா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தமுள்ள 12 கோடி விவசாய குடும்பங்களில் 5.34 கோடி பேர் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 30 சதவீத விவசாய நிலங்கள் பயிர் காப்பீடு திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சதவீதம் வரும் 2018-ம் ஆண்டுக்குள் மேலும் அதிகரிக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ‘விவசாயிகளின் தற்கொலை பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டுவிட முடியாது என்பதை நாங்கள் அறிகிறோம். அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு விவசாய நலத்திட்டங் களின் பலன்கள் கிடைப்பதற்கு போதுமான கால அவகாசம் வேண் டும் என்ற அட்டர்னி ஜெனரலின் கோரிக்கையை ஏற்றுக்கொள் கிறோம். அதே நேரம் விவசாயி களின் தற்கொலையைத் தடுப்பதற் கான வழிமுறைகளை வகுத்திடும் போது மூத்த வழக்கறிஞர் கன்சால்வஸ் முன்வைத்த யோசனைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளவேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x