Last Updated : 16 Jul, 2017 09:52 AM

 

Published : 16 Jul 2017 09:52 AM
Last Updated : 16 Jul 2017 09:52 AM

அரசுப் பணியில் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொறியியல் மாணவர்களை தொடர்ந்து பயன்படுத்த மத்திய அரசு முடிவு

அரசுப் பணிகளில் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க, பொறியியல் மாணவர்களின் திறமையை நிரந்தரமாகப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுப் பணிகளை வேகமாகவும், சுலபமாகவும் முடிப் பதற்கு கணினி மற்றும் ஆன்ட் ராய்டு கைப்பேசிகளை அதிகா ரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பணிகளில் எழும் தொழில் நுட்ப பிரச்சினைகளை தீர்க்க பொறியியல் மாணவர்களின் திற மையை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஐஐடி, என்ஐடி, அரசு மற்றும் தனியார் பொறி யியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் புதிய திட்டம் கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப் பட்டது.

இதற்காக நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் மாணவர் களுக்காக தேசிய அளவில் ‘ஸ்மார்ட் ஹேக்கதான் (Smart Hackathon)’ என்ற போட்டி நடத்தப் பட்டது. இது கடந்த ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் ஒரே சமயத் தில் 36 மணி நேரம் வீடியோ கான் பரன்ஸிங் முறையில் நடத்தப் பட்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 என ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டது. 6 மாண வர்களை கொண்ட ஒவ்வொரு குழுவிலும் இரண்டு வழிகாட்டி களும் இடம் பெற்றிருந்தனர்.

சோதனை அடிப்படையிலான இத்திட்டம் அதிக பலனை கொடுத் துள்ளதால் தற்போது இதை நிரந்தரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது போட்டி வரும் 2018 ஏப்ரலில் நடத்தப்பட உள்ளது. இதன் முக்கிய அங்கத்தினராக மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து ’தி இந்து’விடம் மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, “டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் அறிவித்ததில் இருந்து அரசுக் கோப்புகள் அனைத் தும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் கையாளப் பட்டு வருகின்றன. இதற்கு கணினியின் பல்வேறு வகை மென் பொருள் மற்றும் கைப்பேசிகளின் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சில சமயம் சிக்கல்கள் எழுந்து பணிகள் தடைபடுகின்றன. இதை சரிசெய்வ துடன், புதிய உத்திகளை உரு வாக்கி பணிகளை வேகமாக செய்ய பொறியியல் மாணவர்களின் உதவியை தொடர்ந்து பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

கடந்த மார்ச்சில் மத்திய அமைச்சகங்களின் 29 துறைகளின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. இதற் காக விண்ணப்பித்த சுமார் 40,000 மாணவர்களில் 1,266 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் களிடம் 598 பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன. நாடு முழுவ திலும் இருந்து 2,183 கல்லூரிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 1990 குழுக்களில் போட்டிக்காக 263 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலக நாடுகள் இடையே இதுபோன்ற போட்டியை இந்தியா முதன்முறையாக நடத்தியுள்ளது. இதன் இரண்டாவது போட்டியை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x