Published : 04 Jul 2017 10:03 AM
Last Updated : 04 Jul 2017 10:03 AM

அருந்ததி ராய் மீதான விசாரணைக்குத் தடை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் சாய்பாபாவுக்கு ஆதரவாக தனது ஆதங்கத்தை வார இதழ் ஒன்றில் அவரது கட்டுரையில் அருந்ததி வெளிப்படுத்தி இருந்தார்.

இதையடுத்து அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் அவமதிப்பு நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரிய அருந்ததி ராயின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து நோட்டீ ஸுக்குப் பதிலளித்த அருந்ததி ராய், “ஜனநாயகத்தில் அரசு, நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் உள்ள குறை களைக் கூறவும், வெளிப்படுத்தவும் குடிமகன் தனக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பயன்படுத் துகிறார். இந்த எதிர்ப்புதான் உண்மை யான ஜனநாயகத்தின் அடிப்படை. எதிர்ப்பு என்பது புனிதமானது மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்க தவிர்க்க முடியாதது ஆகும்” என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அருந்ததி ராய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பாக சி.யு.சிங் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி ஹேகர், இந்த வழக்கில் அருந்ததி ராய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிங், ‘இது மன்னிப்புக் கேட்கும் வழக்கு கிடையாது’ என்றார். இதையடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு, மும்பை நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x