Last Updated : 09 Aug, 2016 10:19 AM

 

Published : 09 Aug 2016 10:19 AM
Last Updated : 09 Aug 2016 10:19 AM

சிபிஎஸ்இ-க்கும் மாநிலங்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை பரிந்துரைக்கவில்லை: மக்களவையில் அமைச்சர் பதில்

புதிய கல்வி கொள்கை சர்ச்சை குறித்து, மக்களவையில் நேற்று உறுப்பினர்கள் பலர் கேள்விகள் எழுப்பினர். பூஜ்ய நேரத்தில் துணை கேள்விகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா பதில் அளித்து பேசியதாவது:

நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்ற நோக்கில் தேசிய புதிய கல்வி கொள்கை பரிந்துரைக் கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, இந்திய தேசிய அடையாளமாக கருதப்படும் முக்கிய நிகழ்வுகள் போன்வற்றை உள்ளடக்கியதுதான் புதிய கல்வி கொள்கை.

இந்த தேசிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறு உபேந்திரா கூறினார்.

மற்றொரு துணை கேள்விக்கு உபேந்திரா பதில் அளிக்கும்போது, ‘‘பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘பன்முக பாடத்திட்டம், கல்வி தொடர்பான ஆதாரங்கள் விரும்பத்தக்கனவாக உள்ளன. அதேநேரத்தில் உள்ளூர் விஷயங் கள், கலாச்சாரம், மொழி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. எனவே, சிபிஎஸ்இ-க்கும் மாநில பாடத்திட்டங்களும் ஒரே கல்வி கொள்கை கொண்டு வரு வதற்கு பரிந்துரைக்கப்படவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x