Published : 23 Aug 2016 09:32 AM
Last Updated : 23 Aug 2016 09:32 AM

குஜராத்தில் இடஒதுக்கீடு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் அரசின் அவசர சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குஜராத்தில் இடஒதுக்கீட்டில் இல்லாத பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை குஜராத் மாநில அரசு கடந்த மே 1-ம் தேதி நிறைவேற்றியது.

இதை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி குஜராத் அரசின் அவசர சட்டம், பொருத்தமற்றது, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறி அவசர சட்டத்தை ரத்து செய்தது.

இதைத்தொடர்ந்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மாநில அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது. அதேசமயம் புதிய மாணவர்களை அவசர சட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x