Published : 16 Jan 2014 12:00 AM
Last Updated : 16 Jan 2014 12:00 AM

காஸ் விலை உயர்வு: கேரளத்தில் மார்க்சிஸ்ட் போராட்டம்

சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று தொடர் போராட்டம் தொடங்கினர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட் டத்தை தொடங்கியுள்ளனர்.

கட்சித் தொண்டர்கள், அனு தாபிகள், கட்சியின் இளைஞர், மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக் கணக்கானோர் மாநிலம் முழுவதும் 1,400 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பலர் உண்ணா விரதம் இருந்தனர்.

இப்போராட்டத்தை கொச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் பினரயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் நலனில் அக்கறையில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இவ்விரு அரசுகளும் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. வீட்டு உபயோக சிலிண்டர்கள் மீதான மானியத்தை முற்றிலும் நீக்கும் முயற்சியாகவே, வெளி மார்க்கெட் எரிவாயு சிலிண்டரின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்துக்கு வழிவகுக்கப்படுகிறது” என குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x