Last Updated : 27 Jun, 2016 07:54 AM

 

Published : 27 Jun 2016 07:54 AM
Last Updated : 27 Jun 2016 07:54 AM

குரங்குகளை சமாளிப்பது எப்படி? - கருத்து கேட்கிறது இமாச்சல் அரசு

இமாச்சலப் பிரதேசத்தில் குரங்கு களின் தொல்லை மிக அதிகம். 1999-2004 காலகட்டத்தில் குரங்கு களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்து 3.17 லட்சமாக உயர்ந் தது. இக்குரங்குகள் வேளாண் நிலங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. அண்மைக் காலமாக இக்குரங்குகளால் பல கோடிக்கணக்கான மதிப்பில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது.

அரசு மேற்கொண்டு வரும் கருத்தடை திட்டங்களால், குரங்குகளின் எண்ணிக்கை 2.08 லட்சமாக உள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையே மிக அதிகம். எனவே, குரங்குகளைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என அரசு யோசனை கோரி யுள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் தாகுர் சிங் பார்மவுரி கூறும்போது, ‘‘விவசாயிகள், விலங்குகள் நல ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக் கள் என அனைத்துத் தரப்பினரும் குரங்குகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆலோசனை வழங்கலாம். குரங்குகள் வேளாண் துறையை யும், பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன” எனத் தெரிவித் துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் குரங்குகளை வேட்டையாட ஆறு மாதங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிம்லாவில், குரங்குகள் கேடுவிளைவிக்கும் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா, கங்கரா, உனா, பிலாஸ் பூர், சிம்லா, குலு, ஹம்ரிபுர், சோன்லன், மண்டி ஆகிய பகுதி களில் ஓராண்டு காலத்துக்கு, குரங்குகளை தீங்கு விளைவிக் கும் பிராணிகளாகக் கருதி வேட்டையாட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகி யவற்றில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அமைச்சர் தாகுர் சிங் பார்மவுரி இதுதொடர்பாக மேலும் கூறும்போது, “2006-ம் ஆண்டிலிருந்து கருத்தடை திட்டங்களால் 51 சதவீத குரங்கு களுக்கு கருத்தடை செய்யப்பட் டுள்ளது. குரங்குகளின் எண்ணிக் கையை கட்டுப் படுத்த அவற் றைக் கொல்ல வேண்டுமா அல்லது கருத்தடை செய்ய வேண்டுமா என மக்கள் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

விவசாயிகள் குரங்குகளைக் கொல்வதற்கே ஆதரவு தெரி விக்கின்றனர்.

மருத்துவ பரிசோதனை களுக் காக குரங்களைப் பயன்படுத்த அவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்குவதன் மூலம் குரங்குகளின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தலாம் என கேதி பச்சாவோ சங்கர்ஷ் சமிதி அமைப்பின் நிர்வாகி குல்தீப் சிங் தன்வார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x