Published : 10 Nov 2014 12:01 PM
Last Updated : 10 Nov 2014 12:01 PM

ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார் சுரேஷ் பிரபு

சுரேஷ் பிரபு, திங்கள்கிழமை காலை மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிவசேனா கட்சியின் முன்னாள் நிர்வாகி சுரேஷ் பிரபு (61) மத்திய அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த பிரபு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முறைப்படி பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x