Last Updated : 03 Nov, 2014 12:26 PM

 

Published : 03 Nov 2014 12:26 PM
Last Updated : 03 Nov 2014 12:26 PM

காவல் துறையில் 5.5 லட்சம் காலிப் பணியிடங்கள்: ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு

காவல்துறையில் நாடு முழுவதும் உள்ள சுமார் 5.5 லட்சம் காலிப் பணியிடங்களை ஒரு ஆண்டுக்குள் நிரப்ப வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் அனில் கோஸ்வாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து கோஸ்வாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கடந்த 2009-ம் ஆண்டு நாடு முழுவதும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 21 லட்சத்து 21 ஆயிரத்து 345 ஆக இருந்தது. இது, 2013-ம் ஆண்டு 26 லட்சத்து 47 ஆயிரத்து 722 ஆக உயர்ந் துள்ளது. இதற்கு, மாநில காவல் துறையில் பணியிடங்கள் காலியாக இருப்பதும் காரணம். எனவே, காலிப்பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப வேண்டும்

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1-ம் தேதியின் படி, 5 லட்சத்து48 ஆயிரத்து 361 பணி யிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்ச அளவாக, உத்தரப்பிரதேசத்தில் ஒரு லட்சத்து 1,100 காலிப் பணியிடங் களும், காலியாக உள்ளன. தமிழகத்தில் 20,670 காலிப்பணி யிடங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x