Published : 14 Mar 2017 12:39 PM
Last Updated : 14 Mar 2017 12:39 PM

முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீஸ் தகவல்

முத்துகிருஷ்ணனுக்கு மாணவர் அமைப்புகளுடன் தொடர்பில்லை



ஹைதராபாத் பல்கலைக்கழகத் தில் எம்ஏ வரலாறு பயின்றுள்ளார் முத்துகிருஷ்ணன். அதே பல்கலையில் ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா இவரது நண்பர் எனக் கூறப்படுகிறது. இவர், ‘கிருஷ் ரஜினி’ எனும் பெயரில் முகநூல் பக்கமும் வைத்திருந்துள்ளார். இதில் செய்த சில பதிவுகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது. குறிப்பாக, ஜேஎன்யூவின் உயர்கல்வி சேர்க்கைக்கான நேர்முகத்தேர்வை விமர்சித்துள் ளார்.

இதனால் இவரது மரணமும் சர்ச்சை கிளப்பி உள்ளது. இதனால் அதை முன்கூட்டியே தடுக்க டெல்லி போலீஸார் முயற்சி செய்தனர். அதில் அவர் கள், முத்துகிருஷ்ணன் முகநூலை ஆராய்ந்ததன் மூலம் அவருக்கு அரசியல் ரீதியான மாணவர்கள் அமைப்புகளுடன் தொடர்பு இல்லை எனக் கூறி உள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) ஈஷ்வர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முத்துகிருஷ்ணன் உடலின் மேற்புறத்தில் காயம் எதுவும் இல்லை என்பதால் அது தற்கொலையாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இவர் அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக் களை பதிவேற்றம் செய்து வந் துள்ளார். ஆனால், கடந்த 10 முதல் 12-ம் தேதி வரை எந்தப் பதிவும் இடாதது சந்தேகப்படும்படியாக உள்ளது. இவரது செல்போனில் பதிவாகி உள்ள எண்களை வைத்து விசாரணை நடத்த உள்ளோம்.

ரோஹித் வெமுலாவுடன் இவருக்கு நட்பு இருந்ததை இப் போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. எங்களைப் பொறுத்த வரை அவர் ஜேஎன்யூவிலும் எந்த மாணவர் அமைப்பின் செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை. இவரும் ஜேஎன்யூ நிர்வாகம் மீது இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அவர் மீதும் ஜேஎன்யூ நிர்வாகம் புகார் அளிக்க வில்லை.

முத்துகிருஷ்ணன் இறந்த மற்றும் தங்கியிருந்த ஜீலம் விடுதி அறைகள் இரண்டையும் பரி சோதித்து விட்டோம். மேலும் அவற்றில் தடயவியல் பரிசோத னைக்காக சீல் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஜி.சரவணனின் மர்ம மரணமும் டெல்லி போலீஸாரால் தற்கொலை எனக் கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரேதப் பரிசோதனையில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல எனத் தெரியவந்ததால், கொலை வழக்காகப் பதிவானது.

இதனிடையே முத்து கிருஷ்ணன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்கவுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x