Published : 20 Jun 2017 11:11 AM
Last Updated : 20 Jun 2017 11:11 AM

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு?- சிபிஎஸ்இ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனத் தகவல்

மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் எனத் தெரிகிறது.

மாணாவர்கள் > cbseresults.nic.in, >cbseneet.nic.in. ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7-ம் தேதி நடைபெற்றது. ஜூன் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் விநியோகம் செய்யாததால், நீட் தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த சந்தியா உட்பட 9 மாணவர்களும், திருச்சியை சேர்ந்த மலர்கொடியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவு வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மே 24-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் தடையை நீக்கக் கோரி சிபிஎஸ்இ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைக்கு தடை விதித்ததுடன், தேர்வு முடிவை வெளியிடவும் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி, விடைகள் 15-ம் தேதி வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x