Published : 01 Jan 2016 08:56 AM
Last Updated : 01 Jan 2016 08:56 AM

2 பேர் பணி இடைநீக்கத்தை கண்டித்து டெல்லி அரசு அதிகாரிகள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்

சஸ்பெண்ட் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு

*

டெல்லியில் 2 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அரசு அதிகாரிகள் நேற்று ஒட்டுமொத்த விடுப்பில் சென்றனர்.

‘டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள் சிவில் சர்வீஸ்’ (டேனிக்ஸ்) அதிகாரிகளை, யுபிஎஸ்சி தேர்வு செய்கிறது. இவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுபவர்கள். இந்நிலையில், அரசு வழக்கறிஞர்களின் ஊதி யத்தை உயர்த்த டெல்லி அரசு முடிவு செய்தது. அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை உள் துறை அமைச்சகத்துக்கு டெல்லி அரசு அனுப்பியது.

ஆனால், அந்த ஆவணங்களில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க உயரதிகாரிகள் யஷ்பால் கார்க், சுபாஷ் சந்திரா ஆகியோர் மறுத்து விட்டனர். இதையடுத்து இருவரை யும் டெல்லி அரசு பணி இடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்வதாக அறிவித்தது. இதற்கு டேனிக்ஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்தது.

மேலும், டெல்லி அரசை கண்டித்து நேற்று உயரதிகாரிகள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்தனர். சுமார் 200 டேனிக்ஸ் அதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 70 ஐஏஎஸ் அதி காரிகள் பிற்பகல் 2 மணி வரை அலுவலகத்தில் இருந்து விட்டு வெளியில் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக் கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இன்று (நேற்று) விடுப்பில் சென்ற அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதற் கான எல்லா வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. டேனிக்ஸ் மற்றும் ஐஏஎஸ் சங்கத் தினர், பாஜக.வின் இன்னொரு குழுவாக (‘பி’ டீம்) செயல்படு கின்றனர்.

டெல்லி துணைநிலை ஆளுநர் மூலம் ஆத் ஆத்மி அரசை நீக்க பிரதமர் மோடி திட்டமிடுகிறார். ஆட்சி நிர்வாகத்தில் ஊழலில் ஈடுபடும் மற்றும் கட்டுப்படாத அதிகாரிகளை மாற்றிவிட்டு துறை அறிவு படைத்தவர்களை நியமிக்கும் நேரம் வந்துவிட்டது.

இந்த அதிகாரிகள் நீண்ட விடுப் பில் சென்றால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசு தயாராக உள்ளது. அப்படி அவர்கள் சென்றால், அரசு நிர்வாகம் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படும்.இவ் வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதற்கிடையில், 2 அதிகாரி களை பணி இடைநீக்கம் செய்யும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து பணியில் நீடிக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறும்போது, ‘‘டெல்லியில் ஒற்றைப் படை பதிவு எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப் படை தேதிகளிலும், இரட்டைப் படை எண்கள் கொண்ட கார்கள் இரட்டைப் படை தேதிகளிலும் சாலைகளில் அனுமதிக்கும் திட்டம் புத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதை தடுத்து நிறுத்தவே அதிகாரிகள் மூலம் மத்திய அரசு சதி செய்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

சிசோடியா மேலும் கூறும் போது, “புதன்கிழமை டேனிக்ஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகளும், ஆளுநர் அலுவலக அதிகாரிகளும் நேரடியாக தொடர்பு கெண்டு பேசியுள்ளனர்.

ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்த அதிகாரிகளை மத்திய அரசு தூண்டி விட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x