Last Updated : 28 Oct, 2015 10:00 AM

 

Published : 28 Oct 2015 10:00 AM
Last Updated : 28 Oct 2015 10:00 AM

தேசத் துரோகம் தொடர்பான சுற்றறிக்கை வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தகவல்

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவு (தேசத் துரோகம்) தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, இதுதொடர்பாக பிறப்பித்த சர்ச்சைக்குரிய சுற்றறிக் கையை திரும்பப் பெறப்பட்டுள்ள தாக மகாராஷ்டிர அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 27-ல் பிறப் பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கை சட்டவிரோதமானது என அறிவிக் கக் கோரி 2 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கள் வி.எம்.கனடே மற்றும் ஷாலினி பன்சாகர் ஜோஷி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர் (ஏஜி) ஹரி அனே, இந்த தகவலை தெரிவித்தார்.

இந்த சுற்றறிக்கை எப்படி பிறப் பிக்கப்பட்டது என்று நீதிபதி கனடே கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அனே, இதுகுறித்து அரசு ஆய்வு செய்யும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார் என அனே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர்களில் பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியும் ஒருவர் ஆவார். மற்றொரு மனுதாரர் வழக்கறிஞர் நரேந்திர சர்மா. இந்த சுற்றறிக்கை சட்டவிரோதமானது. குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டதற்காக, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி தேச துரோக வழக்கு உட்பட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரிவேதி கைது செய்யப்பட்டார்.

எனினும், ஒரு பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞரின் ஆலோசனைப்படி திரிவேதி மீதான தேசத் துரோக வழக்கை கைவிட்டது. மற்ற பிரிவு களின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x