Published : 28 May 2017 12:49 PM
Last Updated : 28 May 2017 12:49 PM

பெங்களூருவில் இடி மின்னலுடன் கன‌ மழை

பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று, இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் கடும் மின்வெட்டு நிலவுகிறது.

பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. சூறைக்காற்று வீசியதால் சிவாஜிநகர், அல்சூர், ராமபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடு, அலுவலகம், சாலையோரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததால் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x