Published : 10 Feb 2014 11:32 AM
Last Updated : 10 Feb 2014 11:32 AM

மூன்றாவது அணி தலைவர்கள் தேவகவுடா இல்லத்தில் முக்கிய பேச்சு

மூன்றாவது அணியை அமைப்பது தொடர்பாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பிரதமரு மான எச்.டி.தேவகவுடாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் தேவவிரத பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவை சாராத 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப் படியான கூட்டத்தை நடத்த விரைவில் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. நாடாளு மன்றக் கூட்டத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தள பொதுச் செயலாளர் டேனிஷ் அலி கூறுகையில், “இப்போது அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சு நடைபெற்றுள் ளது. 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான கூட்டம் விரைவில் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப் படும்” என்றார்.

தேர்தலுக்கு முன்பு சாத்தியமில்லை

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் மூன்றா வது அணி கூட்டணி ஏற்பட வாய்ப் புள்ளது. தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைத்து போட்டியிடும் சாத்தியக்கூறு இல்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறிய தாவது: “1977-ம் ஆண்டு முதல் இப்போது வரை தேர்தலுக்குப் பிறகுதான் மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இம்முறையும் தேர்தலுக்குப் பிறகுதான் மூன்றா வது அணி அமையும். அவ்வாறு அமையும் கூட்டணி, முதல் அணி யாக இருக்கும். பொருளாதார ரீதியாக அவதியுறும் மக்களுக்கு உதவும் வகையிலும், மதவாதச் சக்திகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் இந்த கூட்டணி அமையும்” என்றார் யெச்சூரி.

மூன்றாவது அணியில் ஆம் ஆத்மி கட்சி சேர வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அவர்களின் கொள்கை கள் என்னவென்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும்” என்றார் யெச்சூரி. தேர்தலுக்கு முன்பு மூன்றாவது அணி ஏற்படுவது சாத்தியமில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் கூறியுள்ளார்.

11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் முறைப்படியான கூட்டத்தை நடத்த விரைவில் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. நாடாளு மன்றக் கூட்டத்துக்குப் பிறகு இக்கூட்டம் நடைபெறலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x