Published : 03 May 2017 02:46 PM
Last Updated : 03 May 2017 02:46 PM

இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் - பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

காஷ்மீரில் இரு இந்திய வீரர்களைக் கொன்று உடல்களை சிதைத்தது தொடர்பான போதிய ஆதாரங்கள் இருப்பதாக பாகிஸ் தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவை வெகுவாக சின மடைய வைத்திருப்பதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கதி எல்லைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தானின் சிறப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்து இரு இந்திய வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தலையை துண்டித்தனர்.

இந்த சம்பவம் ராணுவத்தினரை யும், நாட்டு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து ‘ஹாட்லைன்’ தொலைபேசி மூலம் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர், பாகிஸ்தான் தலைவரை தொடர்பு கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தியா பதிலடி கொடுப்பதற்கான சூழலை இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டது என்றும் எச்சரித்திருந்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து கொடூரமான முறையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து வெளியறவுத் துறை செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை, வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் நேரில் அழைத்து இந்தியாவின் கண்ட னத்தை தெரிவித்தார். கொடூர செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாகிஸ் தான் வீரர்கள் தான் இந்த தாக்கு தலை நடத்தியதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த சம்பவம் இந்தியாவை வெகுவாக சினமூட்டி விட்டதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய வீரர் களிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரி களும், ரோஸா நாளா பகுதியில் சிந்திய ரத்த மாதிரிகளும் கொலை யாளிகள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதை உறுதிப்படுத்துகிறது என்பதையும் பாசித்திடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உரிய ஆதாரங்கள் வழங்கியபோதும் பாகிஸ்தான் தூதர் பாசித் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x