Published : 21 Jan 2014 09:31 AM
Last Updated : 21 Jan 2014 09:31 AM

ஊழல் புகார் தொடர்பாக ஆதாரமிருந்தால் வெளியிடுங்கள்- சுஷீல் குமார் ஷிண்டே சவால்

என் மீது ஊழல் புகார் தெரிவித்து வரும் மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே. சிங்கும், ஆம் ஆத்மி கட்சியினரும், அது தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான பரிந்துரைக் கடிதங்களை ஆணையருக்கு ஷிண்டே அனுப்பினார். இதில் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம், இந்த பரிந்துரைகளுக்காக ஷிண்டே பணம் வாங்கினார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் டெல்லி போலீஸாரை விசாரணை நடத்தவிடாமல் ஷிண்டே தடுத்தார்.

அந்த தொழிலதிபருக்கு நிழல் உலக தாதா, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு உள்ளது என்று ஆர்.கே.சிங் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.சிங்கின் குற்றச்சாட்டை மேற்கொள்காட்டி பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதி, டெல்லி காவல் துறையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஷிண்டே லஞ்சம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக சுஷீல் குமார் ஷிண்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை கூறுகையில், ``என் மீது ஊழல் புகார் தெரி வித்து வரும் மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே. சிங்கும், ஆம் ஆத்மி கட்சியினரும், அது தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக வெளியிட வேண்டும். நான் எதையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x