Published : 26 Oct 2014 11:34 AM
Last Updated : 26 Oct 2014 11:34 AM

அனல் மின் நிலையங்களுக்கு கங்கை வழியாக நிலக்கரி: இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் திட்டம்

வடக்கு, கிழக்குப் பிராந்தியத் தில் அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரி கொண்டு செல்லும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளது.

இந்திய நீர்நிலைகளில் 15,544 கி.மீட்டர் நீளமுடைய வழிகள் போக்குவரத்துக்கு ஏற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் தற்போது 5,700 கி.மீட்டரில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.

அமெரிக்க போக்குவரத்தில் 21 சதவீதம் நீர்வழித்தடமாகும். எனவே சர்வதேச நாடுகளுக்கு இணையாக நீர்வழித்தட போக்கு வரத்தை அதிகரிக்க இந்திய உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து ஆணையம் பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறது.

அதன்படி வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் அலகாபாத் முதல் ஹால்டா வரை அமைந்துள்ள 21 அனல் மின் நிலையங்களுக்கு கங்கை நதி வழியாக நிலக்கரியை கொண்டு செல்ல நீர்வழிப் போக்கு வரத்து ஆணையம் புதிய திட் டத்தை தயாரித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் அமிதாப் வர்மா “பிசினஸ் லைன்” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கங்கை நதியில் ஏற்கெனவே சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இறக்குமதி செய்யப்ப டும் நிலக்கரி மற்றும் உணவு தானியங்கள் கங்கை நதி வழியாக வடக்கு, கிழக்கு பிராந்தியத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

தற்போது நீர்வழித்தட சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க அரசு- தனியார் பங்களிப்பில் புதிய திட்டத்தை தயாரித்துள்ளோம். இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது கங்கையில் நாள்தோறும் 90 சிறிய சரக்கு கப்பல்கள் இயக்கப்படும்.

முதல்கட்டமாக பிகார் மாநிலம் பார் நகரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி எடுத்துச் செல்ல திட்டமிட்டுள் ளோம்.

21 அனல் மின் நிலையங்கள்

அலகாபாத் முதல் ஹால்டா வரையில் தற்போது 11 அனல் மின் நிலையங்கள் செயல்படுகின்றன. இன்னும் 6 ஆண்டுகளில் மேலும் 10 அனல் மின் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. அனைத்து அனல் மின் நிலையங்களும் கங்கை நீர் வழித்தடம் மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப் படும்.

தற்போது எங்களிடம் சில சரக்கு கப்பல்கள் மட்டுமே உள்ளன. எனவே முதல்கட்டமாக 10 சிறியரக சரக்கு கப்பல்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். ஒரு சரக்கு கப்பலில் 2000 டன் வரை நிலக்கரியை ஏற்ற முடியும்.

மேலும் குத்தகைக்கும் சரக்கு கப்பல்களை எடுக்க முடிவு செய்துள்ளோம். கங்கை மட்டுமன்றி பிரம்மபுத்திராவில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக் கப்படும்.

சிக்கனமான போக்குவரத்து

நீர்வழிப் போக்குவரத்து மிகவும் சிக்கனமானது. தற்போது மேற்கு வங்கம் பராக்காவில் உள்ள அனல் மின் நிலையத்துக்குசாலை மார்க்கமாக நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்துக்கு நீர்வழித்தடத்தில் நிலக்கரியை எடுத்துச் சென்றால் 20 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும். சுற்றுச்சூழல் மாசு குறையும்.

போக்குவரத்து நெரிசல் குறையும் என பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x