Last Updated : 02 Feb, 2017 07:58 AM

 

Published : 02 Feb 2017 07:58 AM
Last Updated : 02 Feb 2017 07:58 AM

மத்திய பட்ஜெட் 2017-18: நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றால் சொத்து பறிமுதல்

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரத்து

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியம் (எப்ஐபிபி) ரத்து செய்யப்படுவதாக மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மீது அடிக்கடி பல் வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த வாரியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மருந்து உற்பத்தி முதல் விமானப் போக்குவரத்துத் துறை வரை அந்நிய முதலீட் டாளர்களை ஈர்ப்பதற்கும் எளிதாக முதலீடு செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு தொடர் பான விதிகளில் பல்வேறு சீர்த் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

மத்திய அரசின் முக்கியமான நோக்கம் அந்நிய நேரடி முத லீட்டில் உலகிலேயே மிகச் சிறந்த பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசிய போது தெரிவித்தார். எனவே, வரும் ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறை கள் மற்றும் கொள்கைகள் தளர்த்தப்படும்.

`மேக் இன் இந்தியா’ திட்டம் இருந்தபோதிலும் அரசுத்துறை அதிகாரிகளின் குறுக்கீடு மற்றும் வரி அதிகாரிகளின் குறுக்கீடு போன்றவற்றால் பன்னாட்டு முத லாளிகள் இதுவரை மிக கவனத் துடனே இருந்து வருகின்றனர்.

அந்நிய முதலீட்டு மேம் பாட்டு வாரியம் கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி மதிப்புள்ள அந்நிய முதலீட்டுக்கான விண்ணப் பங்களுக்கு ஒப்புதல் அளித்துள் ளது. இதில் இந்தி யாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பது தொடர்பான விண்ணப்பமும் அடங்கும்.

இந்தியாவில் சில துறைகளில் நேரடியாக ஒப்புதல் பெற வழிகள் உள்ளன. இந்த துறைகளில் அந்நிய முதலீடு செய்வதற்கு முன் கூட்டியே மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. ஆனால் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் திட்டங்களை கையாளும்போது அரசின் ஒப்புதல் வேண்டும் என்று கூறுகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகள், பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்து போன்ற துறைகளுக்கான திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் தேவை என்று குறிப்பிடுகிறது.

1990-ம் ஆண்டு பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது பிரதமர் அலுவலகம் அந்நிய முத லீட்டு மேம்பாட்டு வாரியம் அமைத் தது. பிறகு 2003-ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்திலிருந்து நிதி யமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த வருடம் அந்நிய நேரடி முதலீடு 30 சதவீதம் அதிகரித்து 2,200 கோடி டாலர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நுழைவுத்தேர்வு நடத்த தேசிய சோதனை முகமை தொடங்கப்படும்

உயர் கல்வி நுழைவுத் தேர்வை நடத்த தேசிய சோதனை முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறை சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவதற்காக தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தேசிய சோதனை முகமை தொடங்கப்படும்.

இதன்மூலம் சிபிஎஸ்இ, ஏஐசிடிஇ மற்றும் இதர முன்னணி கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படும். இதன்மூலம் அந்த நிறுவனங்களால் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் வருடாந்திர கற்றல் பலனை மதிப்பிடும் முறை அறிமுகம் செய்யப்படும். அனைத்து தரப்பினருக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிக்கல்வி புத்தாக்க நிதியம் உருவாக்கப்படும்.

‘ஸ்வயம்’ திட்டத்தின் மூலம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இணையதளம் வழியாக 350 பாடத்திட்டங்கள் (கோர்ஸ்) கற்பிக்கப்படும். கலந்துரையாடல், மாதிரி தேர்வு உள்ளிட்டவையும் இதில் அடங்கும். இந்தத் திட்டம் டிடிஎச் சேனல்கள் மூலம் வழங்கப்படும்.

உயர்தரமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாக மற்றும் பாடதிட்ட தன்னாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவிரைவு இன்டர்நெட் வசதி

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதி விரைவு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

பாரத்நெட் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவிரைவு இன்டர்நெட் வசதி செய்து தரப்படும். இதைச் செயல்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த 1.55லட்சம் கி.மீ. தூரத்துக்கு கண்ணாடி இழை (ஆப்டிக் பைபர்) கேபிள் போடப்படும். இதுவரையில் 75,700 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் 59 கிராம பஞ்சாயத்துகளே இணைக்கப்பட்டிருந்தன.

இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கிராமப்பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் சார்ந்த விஷயங்கள் கற்றுத் தரப்படும். மேலும் டெலி மெடிசின் வசதி டிஜிகியோன் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்..

வரும் நிதியாண்டில் (2017-18) ரூ.2,500 கோடிக்கு ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எட்டுவதற்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

வங்கிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதலாக 10 லட்சம் பிஓஎஸ் இயந்திரங்களை வாங்க உள்ளன. மேலும் ஆதார் அடிப்படையிலான பிஓஎஸ் இயந்திரங்களை செயல்படுத்த ஊக்குவிக்கப்படும்.

கிராமப் பகுதிகள் மற்றும் ஓரளவு நகரப்பகுதிகளாக உயர்ந்த இடங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், இது தொடர்பாக எழும் குறைகளைப் போக்கவும் தபால் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர ரொக்கமற்ற பரிவர்த்தனை குறித்த ஆலோசனைகளை ரேஷன் கடை மற்றும் வங்கி பிரதிநிதிகள் மூலம் இப்பகுதிகளுக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக துறைக்கு 1,87,200 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ஊரகத் துறைக்கு இதுவரை இல்லாத அளவில் வரும் நிதியாண்டில் ரூ.1,87,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டை காட்டிலும் 24% அதிகம் ஆகும்.

நூறுநாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.38,500 கோடியில் இருந்து 48 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நூறுநாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற பெண்களை அதிகாரம் பெறச் செய்வதற்காக கிராம அளவில் மகளிர் சக்தி மையங்கள் (மகிளா சக்தி கேந்திரா) இந்த நிதியாண்டில் தொடங்கப்படும்.

நாட்டின் அனத்து (100%) கிராமங்களுக்கும் மின்சார வசதி என்ற இலக்கு 2018, மே 1-ம் தேதி எட்டப்படும். வீடு இல்லாத மற்றும் குடிசையில் வசிக்கும் 1 கோடி குடும்பங்களுக்கு 2019-ம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டப்படும்.

பிரதமர் வீடுகள் கட்டும் திட்டத்தின் (அவாஸ் யோஜனா) கீழ் வழங்கப்படும் மானியக் கடனை திரும்ப செலுத்தும் காலம் 15-ல் 20 ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதி ஒதுக்கீடு ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.23 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் கிராம சாலை திட்டத்தில் (கிராம சதக் யோஜனா) நடைபெறும் சாலைப் பணி நாள் ஒன்றுக்கு 133 கி.மீ. ஆக 2016-17-ல் உயர்ந்துள்ளது. இது கடந்த 2011-14-ல் 73 கி.மீ. ஆக இருந்தது.

திறந்தவெளி கழிப்பிட பழக்கம் இல்லாத அல்லது அப்பழக்கத்தை கைவிட்ட கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் முன்னுரிமை தரப்படும்.

லோக்பால் நிதி 50 சதவீதம் குறைப்பு

லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான நிதி கடந்த பட்ஜட்டை காட்டிலும் இந்த பட்ஜெட்டில் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கான (சிவிசி) நிதி ஒதுக்கீட்டுல் எந்த மாற்றமும் இல்லை.

லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது மற்றும் கட்டுமானப் பணி தொடர்பான செலவுக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.8.58 கோடி ஒதுக்கப்பட்டது. என்றாலும் லோக்பால் அமைக்க முடியாமல் போனதால் பின்னர் இந்த ஒதுக்கீடு பூஜ்ஜியமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் லோக்பால் ஏற்படுத்த வரும் நிதியாண்டில் 4.29 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு செயலக செலவுக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.27.68 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் அதே தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி

நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மொத்த பட்ஜெட் செலவினங்களில் (ரூ.21.47 லட்சம் கோடி) 12.78 சதவீத தொகையை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்குவதாக அறிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு 10.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் 2017-2018-ம் ஆண்டு பட்ஜெட்டிலும் பாதுகாப்புத் துறைக்கு 10 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கல் போன்றவற்றில் இந்த நிதி அதிகரிப்பு அவசியமானதுதான் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உள்துறைக்கு ரூ.78,000 கோடி ஒதுக்கீடு

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் 7 துணைநிலை ராணுவப் படைகளுக்கு ரூ.54,985 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிஆர்பிஎப் படைக்கு மட்டும் ரூ.17,868 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறையின் கீழ் வரும் டெல்லி போலீஸ் துறைக்கு ரூ.5,910 கோடி அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உள்துறைக்கு ரூ.78,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட் தொகையில் 6.37 சதவீதம் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1.25 கோடி மக்களிடம் ‘பீம் செயலி’ பயன்பாடு

டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்ட பீம் (பாரத் இண்டர்பேஸ் பாஃர் மணி) செயலியை தற்போதுவரை 1.25 கோடி மக்கள் பயன்படுத்தி வருவதாக நேற்று பட்ஜெட் உரையின் போது அருண் ஜேட்லி தெரிவித்தார்.

யுனிபைடு பேமெண்ட் இண்டர்பேஸை (யுபிஐ) செயலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பீம் செயலி கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மொபைல் போன் மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கூகுள் பிளேஸ்டோரில் இதை டவுன்லோடு செய்து கொள்ளமுடியும்.

பீம் செயலி அறிமுகப்பட்டதிலிருந்து 30 லட்சம் முறை டவுன்லோடு செய்யப்பட்டதாகவும் பீம் செயலி மூலமாக 5 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகம் ஏற்கெனவே நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்னணு பணப் பரிமாற்றத்துக்கான பிஓஎஸ் இயந்திரங்களுக்கு வரிகள் ரத்து

மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக பாய்ன்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) மற்றும் விரல் ரேகை பதிவு இயந்திரங்களுக்கான அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, பிஓஎஸ், மினி ஏடிஎம் மற்றும் விரல் ரேகை பதிவு இயந்திரங்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை சுங்க வரி, உற்பத்தி வரி, சிறப்பு கூடுதல் வரி உட்பட அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படும்.

மேலும் இத்தகைய இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படும். இது இத்தகைய உதிரி பாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அத்துடன் இவற்றின் விலையும் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்சினா எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் செயலாளர் ராஜூ கோயல் கூறும்போது, “மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், இந்த சலுகை உடனடி தேவையை பூர்த்தி செய்வதற்காக மட்டும் இருக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் இச்சலுகையை வழங்கினால் இந்த இயந்திரங்கள் வெளிநாட்டு சந்தையிலிருந்து குவிந்துவிட வாய்ப்பு உள்ளது” என்றார்.

மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கு 20% கூடுதலாக நிதி ஒதுக்கீடு

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக 20 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காக ரூ.22,095 கோடி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் ரூ.17,640 கோடியைவிட 20 சதவீதம் அதிகம். இதில், இந்திரா காந்தி மகப்பேறு திட்டத்துக்கு (ஐஜிஎம்எஸ்ஒய்) ரூ.2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் ரூ.634 கோடியைப் போல 4 மடங்கு அதிகம். இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்.

இந்த திட்டம் சோதனை முயற்சியாக 53 மாவட்டங்களில் அமல்படுத்துப்பட்டது. இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என புத்தாண்டு அன்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் அடிப்படையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கிராம அளவில் ‘மகிளா சக்தி கேந்திரம்’ அமைப்பதற்காக, 14 லட்சம் ஐசிடிஎஸ் அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

பிரதமரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகம். நிர்பயா நிதியத்துக்கு நடப்பு நிதியாண்டைப் போலவே அடுத்த நிதியாண்டுக்கும் ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு எத்தனை கோடி?

2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்மை, ஊரகம் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.1,87,223 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 24 சதவீதம் அதிகம்.

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

வேளாண் தொழிலுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.10 லட்சம் வரை வேளாண் கடன் வழங்கப்படும்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கான உச்சவரம்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி மூலம் அர்ப்பணிக்கப்பட்ட நுண்ணிய பாசன நிதியம் அமைக்கப்படும். இதன் மூலம் ஒரு துளியில் அதிக விளைச்சல் என்ற இலக்கை எட்ட முடியும். இதற்கு ஆரம்ப மூலதனமாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நபார்டு வங்கி மூலம் ரூ.8,000 கோடி ஒதுக்கீட்டில் பால் பொருட்கள் பதனிடும் உள்கட்டமைப்பு நிதியம் அமைக்கப்படும்.

கிருஷி விஞ்ஞான் மையங்கள் மூலம் சிறிய பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும். 30 சதவீதமாக உள்ள பசல் பீமா யோஜனா திட்டம் 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றால் சொத்து பறிமுதல்

நிதி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

கிங்பிஷர் விமான நிறுவனத்துக்காக வங்கிகளிடம் இருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் தப்பிச் சென்றார். இதனால் அவரிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் மக்களவையில் நேற்று நடப்பாண்டுக்கான பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி நிதி மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதற்காக அரசமைப்பு சட்டத்தில் சில மாறுதல் கொண்டு வருவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக கூறினார்.

3.5 கோடி இளைஞர்களுக்கு கல்வி, திறன் பயிற்சி, வேலை

‘‘நாட்டில் கல்வி, திறமை, வேலை ஆகியவற்றின் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது, மத்திய அரசின் 10 முக்கிய திட்டங்களில் ஒன்றாக உள்ளது’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு 10 முக்கிய துறைகளில் அரசு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதன்மூலம் இந்தியாவை மாற்றி அமைக்க வேண்டும். கல்வி, திறமை வளர்ப்பு, வேலை வாய்ப்பு இவற்றின் மூலம் நாட்டில் 3.5 கோடி இளைஞர்களை ஊற்சாகப்படுத்துவது 10 அம்சங்களில் ஒன்று.

இதற்காக ‘சங்கல்ப்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், 3.5 கோடி இளைஞர்களுக்கு சந்தை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்காக நாடு முழுவதும் 100 ‘இந்தியா சர்வதேச திறன் பயிற்சி மையங்கள்’ அமைக்கப்படும். இந்த மையங்களில் நவீன திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன் இங்கு வெளிநாட்டு மொழிகளிலும் பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் இளைஞர்களுக்கு இந்த மையங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

மேலும், ‘பிரதான் மந்திரி கவுஷல் கேந்திரா’க்கள் தற்போது 60 மட்டுமே உள்ளன. இதன் எண்ணிக்கையை 600 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவிர தொழிற்துறை மதிப்பை கூட்டும் வகையில் அடுத்தக் கட்டமாக திறமைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடியில் திட்டம் (ஸ்டிரைவ்) அறிமுகப்படுத்தப்படும்.

சலுகை விலை வீடுகளுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து

சலுகை விலை வீடுகளுக்கு இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நலிவடைந்த ரியல் எஸ்டேட் தொழிலை ஊக்கப்படுத்துவதற்காக இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள் சலுகை விலையில் வீடுகளை கட்டித் தர வசதியாக பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சலுகை விலையில் வீடுகளை கட்டி தருவதற்கான கால அவகாசமும் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளை வாங்கிவிட்டு அதை 3 ஆண்டு காலம் வரை வைத்திருந்த பிறகே விற்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த சொத்துகளை 2 ஆண்டுகள் மட்டும் வைத்திருந்து இனி விற்க முடியும்.

அரசியல் கட்சிகள் ரூ.2,000-க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வாங்க தடை

அரசியல் கட்சிகள் நன்கொடையை ரொக்கமாக பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள விதிமுறையின்படி, அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரம் வரை யாரிடமிருந்து வேண்டுமானாலும் நன்கொடையாக பெற முடியும். இதுபற்றி கணக்கு வைத்திருக்கத் தேவையில்லை. ஆனால் ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை காசோலையாக பெறுவதுடன், அந்தத் தொகையை வழங்கியவர் பற்றிய விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இதனால் அரசியல் கட்சிகளின் நன்கொடை வருமானத்தின் பெரும்பகுதி ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட கோடிக்கணக்கான கறுப்புப் பணம் தேர்தலின்போது பயன்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் குறைகூறி வந்தனர்.

இதனிடையே, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் அறிவித்தார். இந்தப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி, அரசியல் கட்சிகள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பழைய ரூபாய் நோட்டு

களுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில கட்சிகள் கோடிக்கணக்கான பணத்தை டெபாசிட் செய்தன. இந்நிலையில்தான் அரசியல் கட்சிகள் இனிமேல் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக நன்கொடைபெறக்கூடாது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் நேற்று அறிவித்தார்.

சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம்

சிட்பண்ட் மோசடிகளைத் தடுக்க புதிய சட்டம் அறிமுகம் செய்யப் படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் சாரதா சிட்பண்ட் ஊழலால் லட்சக்கணக் கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் சிட்பண்ட் மோசடிகள் நடைபெற்று வரு கின்றன. இதை தடுக்க புதிய சட்டத்தை வரையறுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது:

மோசடிகாரர்களிடம் இருந்து ஏழைகளையும் நடுத்தர மக்க ளையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தற் போதைய சட்டத்தில் உள்ள ஓட்டை களைப் பயன்படுத்தி சிட்பண்ட் மோசடிகாரர்கள் தப்பி வருகின்ற னர். எனவே நாடு தழுவிய அளவில் சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்ட மசோதா வரை யறுக்கப்பட உள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் அலுவலக ஒதுக்கீடு 17 சதவீதம் உயர்வு

வரும் நிதியாண்டில் குடியரசுத் தலைவர் அலுவலக ஒதுக்கீடு 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் குடியரசுத் தலைவர் அலுவலக செலவுக்கு ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய பட்ஜெட்டில் இது ரூ.66 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த பட்ஜெட்டை விட 17 சதவீதம் அதிகம் ஆகும்.

இது தொடர்பாக பட்ஜெட் ஆவணத்தில், “குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் படிகள் என்ற வகையில் கடந்த நிதியாண்டில் ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர் இத் தொகை ரூ.67 லட்சமாக திருத்தி அமைக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் செயலக செலவுக்காக கடந்த பட்ஜெட்டில் அரசு ரூ.18.48 லட்சம் ஒதுக்கியது. இந்த பட்ஜெட்டில் இது ரூ.18.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள் ளது.

பிற செலவுகள் என்ற வகையில் கடந்த பட்ஜெட்டில் ரூ.36.85 லட்சம் (திருத்திய மதிப்பீடு) ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட் டில் இது ரூ.46.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கலாச்சார அமைச்சகத்துக்கு கூடுதல் நிதி

மத்திய பட்ஜெட்டில் கலாச்சார அமைச்சகத்துக்கு 10 சதவீதம் வரை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ரூ.2,738.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரும் ஏப்ரலில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.924.37 கோடி அகழ் வாராய்ச்சி துறைக்கும், பிரபல மானவர்களின் நூற்றாண்டு விழாக்கள், கலாச்சார விழாக் கள் ஆகியவை கொண்டாடு வதற்கு ரூ.243.01 கோடியும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது தவிர ரூ.310.48 கோடி கலா சம்ஸ்கிருதி விகாஸ் யோஜனா வுக்கும், நூலகங்கள் மற்றும் ஆவண காப்பகங்களுக்கு ரூ.96.64 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் கலாச்சார அமைச்சகத் துக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப் பட்டிருந்தது.

உள்கட்டமைப்புத் துறைக்கு ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் உள்கட்ட மைப்புத் துறையில் மொத்தம் ரூ.3.96 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதிய மைச்சர் அருண் ஜேட்லி கூறிய தாவது:

வரும் நிதியாண்டில் உள்கட்ட மைப்புத் துறைக்கு ஒட்டுமொத்த மாக ரூ.3,96,135 கோடி ஒதுக் கப்படும். இதுவரை இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கப் படுவதால் பொருளாதார நடவடிக் கைகள் அதிகரிப்பதுடன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இதில் ரயில்வே, சாலை, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு மட்டும் ரூ.2,41,387 கோடி ஒதுக்கப்படும். இதில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடியும், நெடுஞ்சாலைகளுக்கு ரூ.64 ஆயிரம் கோடியும் ஒதுக்கப் படும். 2,000 கி.மீ. தூரத்துக்கு கடற்கரை இணைப்பு சாலைகள் போடப்படும். இதன்மூலம் துறை முகங்கள் மற்றும் குக்கிராமங் களுக்கு சாலை இணைப்பு வசதி கிடைக்கும்.

பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் (பிஎம்ஜி எஸ்ஒய்) கீழ் கடந்த 2014-15 முதல் இதுவரை 1.4 லட்சம் கி.மீ. தொலைவுக்கு சாலைகள் போடப் பட்டுள்ளன. இது முந்தைய காலங்களைவிட மிக அதிக அளவாகும்.

இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தியை இலக்கை அடை வதற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படும். இரண்டாம் தர நகரங்களில் குறிப்பிட்ட விமான நிலையங்கள் பிபிபி முறையில் மேம்படுத்தப்படும். கிராமப்புறம், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x