Published : 02 Feb 2017 08:01 AM
Last Updated : 02 Feb 2017 08:01 AM

மத்திய பட்ஜெட் 2017 - 18: பட்ஜெட் துளிகள்

* ரூ.50 கோடிக்கு குறைவான ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.

* இன்ஷூரன்ஸ் முகவர் வருமான வரி வரம்புக்குள் இல்லை என சுய சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் டிடீஎஸ் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர் செலுத்த வேண்டிய வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்துக்குள் இருப்பவருக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி செய்யப்படும்.

* ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 10 சதவீத சர்சார்ஜ் மற்றும் 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு 15 சதவீத சர்சார்ஜ் பிடிக்கப்படும்

* ரூ.5 லட்சத்துக்குள் சம்பளம் வாங்குபவரின் வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக்கப்படும்.

* முதல் முறையாக வரி தாக்கல் செய்பவர்கள் மீது எந்தவிதமான ஆய்வும் செய்யப்பட மாட்டாது,.

* சேவை வரி மற்றும் விற்பனை வரியில் எந்த மாற்றமும் இல்லை. இவை விரைவில் ஜிஎஸ்டியாக மாறும்.

* 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்ய முடியாது.

* நிலம் தொடர்பான மூலதன ஆதாய வரி 3 ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டாக குறைக்கப்படுகிறது.

* உள்கட்டமைப்புத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3,96,135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கிராமப்புறம், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 24 சதவீதம் அதிகமாகும்.

* தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக ரூ.64,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வீடு இல்லாதவர்கள் மற்றும் குடிசையில் வாழ்பவர்களுக்கு 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

* ரயில், சாலை, கப்பல் உள்ளிட்ட போக்குவரத்து துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பாரத் நெட் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* வர்த்தக உள்கட்டமைப்பு ஏற்றுமதி திட்டம் 2017-18-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x