Last Updated : 19 Jun, 2016 04:00 PM

 

Published : 19 Jun 2016 04:00 PM
Last Updated : 19 Jun 2016 04:00 PM

ராகுலுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் வாழ்த்துக்கு நன்றி மோடிஜி” என பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநில முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இபோபி சிங் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x