

டெல்லி: பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி கரோல்பாக் பகுதியைச் சேர்ந்த பியூஷ் குமார் (31) என்பவரும், ஹரியானா குருகிராமைச் சேர்ந்த ஜதின் கஜோதியா (31) என்பவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளனர். இவர்கள் டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம், பங்குச் சந்தையில் லாபம் ஈட்டித் தருகிறோம் என உறுதியளித்து ரூ.80 லட்சத்தை பெற்றுள்ளனர். ஆனால் அவருக்கு லாபத் தொகையும் அளிக்கவில்லை, முதலீட்டு பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதனால் அவர் இருவர் மீதும் போலீஸில் மோசடி புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் ரூ.80 லட்சம் பணத்தை பலரது வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பியூஷ் குமார், குருகிராமில் தங்கிருந்த கஜோதியாவை போலீஸார் கைது செய்தனர். இவர்களது பெயரில் பங்குச் சந்தையில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பங்குகளும் முடக்கப்பட்டன.