Published : 23 Mar 2014 01:03 PM
Last Updated : 23 Mar 2014 01:03 PM

பார்மரில் ஜஸ்வந்த் சிங் சுயேச்சை வேட்பாளராக போட்டி

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.



இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆம், நான் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறேன். சுயேச்சையாகவா என்பது கட்சியின் அணுகுமுறையைப் பொருத்தது" என்றார்.

பாஜக மீது சரமாரி தாக்கு...

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஏற்காத கட்சி மேலிடம், காங்கிரஸிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த கர்னல் சோனாராம் சவுத் ரிக்கு பார்மர் தொகுதியை ஒதுக்கியது.

இதனால், அதிருப்தியடைந்த ஜஸ்வந்த் சிங், பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜோத்பூரில் ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறியது: "இதேபோன்று இரு முறை கட்சி என்னிடம் நடந்து கொண்டுள்ளது. கட்சி முன்வைக் கும் மாற்று யோசனை எதையும் இப்போது ஏற்க மாட்டேன்.

பாஜகவின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காத வெளியாட்களின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. பாஜக கொள்கைகளுக்கு எதிரான வர்களின் ஆதிக்கத்தில் கட்சி இருப்பது மிகவும் துரதிருஷ்டமான நிலையாகும். கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை.

பாஜகவில் இப்போது இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் உண்மையான பாஜகவினரும்; மற்றொரு பிரிவில் போலி பாஜகவினரும் உள்ளனர். துரதிருஷ்டவ சமாக போலி பாஜகவினரின் ஆதிக்கத்தில் கட்சி இப்போது இருக்கிறது. கட்சியை ஆக்கிரமித் துள்ளவர்கள் பற்றியும், அவர்கள் அடைந்து வரும் ஆதாயம் பற்றியும் பாஜக கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

கட்சி இப்போது எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறிய ஜஸ்வந்த் சிங், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைபவர்களுக்கு ரயில், விமான டிக்கெட் கிடைப்பது கூட கடினமாக இருக்கலாம். பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான டிக்கெட் எளிதாக கிடைக்கிறது என்று கிண்டலடித்தார்.

ராஜ்நாத் சிங் பேட்டி...

கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மூத்த தலைவர்கள் மீது கட்சி வைத்திருக்கும் மரியாதையை, தொகுதி ஒதுக்கீட்டை வைத்து முடிவு செய்துவிடக் கூடாது. கட்சியின் மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவரின் சேவை யையும், அனுபவத்தையும் தகுந்த நேரத்தில் கட்சி பயன்படுத்திக் கொள்ளும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x