Last Updated : 20 Jul, 2016 10:19 AM

 

Published : 20 Jul 2016 10:19 AM
Last Updated : 20 Jul 2016 10:19 AM

ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டுஇன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுதந்திரமாக இயங்க அரசு அதிகாரிகளை அனுமதிக்க முடிவு

மத்திய அரசின் உயரதிகாரிகள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு உயரதிகாரிகள் தொலைக்காட்சி, சமூக வலை தளங்கள், இதர தொலைத் தொடர்பு செயலிகள் வழியாக கேலிச்சித்திரம் உட்பட எவ்வகையிலும் அரசை விமர்சிக்கக் கூடாது என மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் விதிமுறை வரை யறுத்துள்ளது.

தற்போது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் (வனத்துறை) உள் ளிட்ட உயரதிகாரிகள் சமூக வலை தளங்களில் சுதந்திரமாக செயல் படும் விதத்தில், இதுதொடர்பான அனைத்திந்திய பணிகள் (நடத்தை) சட்டம் 1968-ல் சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

பொது அமைப்புகள், நிறுவனங் களால் ஏற்பாடு செய்யப்படும் செலவில்லாத பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க குடிமைப் பணி அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கிறது.

ஆனால், அதிகாரிகள் தங்களின் இரண்டு மாத அடிப் படை சம்பளத் தொகையை விட அதிகமான மதிப்புடைய வீட்டு உபயோகப்பொருட்கள், வாகனங்கள் இதர வசதிகள் தங்களுக்குச் சொந்தமாக இருப்பின் அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்ற ஷரத்து இந்த திருத்தத்தில் சேர்க்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x