Published : 10 Oct 2015 08:47 AM
Last Updated : 10 Oct 2015 08:47 AM

தாத்ரி சம்பவத்தில் பாஜகவினருக்கு நேரடி தொடர்பு: பெங்களூருவில் ராகுல் காந்தி கடும் தாக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் மாட்டிறைச்சி உண்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பாஜக வினருக்கு நேரடி தொடர்பு இருப்ப தாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயி களையும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்கவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பெங்களூரு வந்தார். அங்கிருந்து மண்டியா மாவட்டத்தில் தற் கொலை செய்துகொண்ட விவசாயி களான கோததி கிராமத்தைச் சேர்ந்த மாதே கவுடா, பனகன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ், பாண்டவபுராவை சேர்ந்த லோகேஷ் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றார்.

அங்கு அவர்களது குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார்.இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இதன் பிறகு பெங்களூருவுக்கு வந்த ராகுல் காந்தி 15 இளம் தொழில் முனைவோரை சந்தித்து அரை மணிநேரம் பேசினார். இதையடுத்து அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அங்கு ராகுல்காந்தி பேசிய தாவது:

சமீப காலமாக நாட்டில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் எதிர்கால இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த நாட்டை பிளவு படுத்தும் வேலையில் பாஜகவும் பிரதமர் மோடியும் தீவிரமாக இருக்கிறார் கள். இத்தனை ஆண்டுகாலம் சகோதரர்களாக வாழ்ந்த இந்துக் களையும் இஸ்லாமியரையும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள வைப்பதுதான் அவர் களின் கொள்கையாக இருக்கிறது.

நடந்து முடிந்துள்ள ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைத்தான் செய்கிறார்கள். தாத்ரியில் இஸ் லாமிய முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு நேரடி தொடர்பு இருக்கிறது. இதைப் பற்றி பல நாட்களாக மவுனமாக இருந்த மோடி, இப்போது திடீரென மத‌நல்லிணக்கம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்திக் கும் பிரதமர் மோடி, நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீட்டிற்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வீட்டிற்கும் செல்வாரா? விவசாயிகளின் தற்கொலைகளை மத்திய அரசு தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x