Last Updated : 15 Apr, 2017 06:24 PM

 

Published : 15 Apr 2017 06:24 PM
Last Updated : 15 Apr 2017 06:24 PM

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் ஃபரூக் அப்துல்லா வெற்றி

ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.

காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியின் சார்பாக ஃபரூக் அப்துல்லாவும், அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சியின் நசீர் அகமத் கானும் போட்டியிட்டனர். இவ்விருவரைத் தவிர்த்து 7 வேட்பாளர்களும் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடந்த இடைத்தேர்தல் வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காஷ்மீரின் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக 7.13 சதவீத ஓட்டுகளே மட்டுமே பதிவானது.

இதனையடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட 38 இடங்களில் ஏப்ரல் 13-ம் ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஃபரூக் அப்துல்லா 48,554 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஃபரூக் அப்துல்லாவை எதிர்த்து போட்டியிட்ட நசீர் அகமத்கானுக்கு 37,779 ஓட்டுகள் கிடைத்தன.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து ஃபரூக் அப்துல்லா கூறும்போது, "இந்த ஓட்டுகள் அனைத்தும் மக்கள் ஜனநாயகக் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பதை காட்டுகின்றன" என்றார்.

இந்த வெற்றி மூலம் ஃபருக் அப்துல்லா மூன்றவாது முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x