Last Updated : 18 Apr, 2017 09:45 AM

 

Published : 18 Apr 2017 09:45 AM
Last Updated : 18 Apr 2017 09:45 AM

மலப்புரம் தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம்லீக் வெற்றி

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி வேட்பாளர் பி.கே.குன்ஹாலிகுட்டி வெற்றி பெற்றுள்ளார்.

இவர், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.பி.பைசலை 1.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக வேட்பாளர் என்.பிரகாஷ் 3-ம் இடத்தைப் பிடித்தார். இந்த தொகுதி எம்.பி.யாக இருந்த ஐயுஎம்எல் கட்சியைச் சேர்ந்த இ.அகமது கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து இந்தத் தொகுதியில் கடந்த 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரான குன்ஹாலிகுட்டி, வெங்காரா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வாக உள்ளார். இவர் முதன் முறையாக நாடாளுமன்றத்துக்கு செல்ல உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x