Last Updated : 16 Jun, 2017 10:21 AM

 

Published : 16 Jun 2017 10:21 AM
Last Updated : 16 Jun 2017 10:21 AM

காமக்யா விழாவில் நாகா சாதுக்களுக்கு கட்டுப்பாடு: அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு முடிவு

அசாமில் புகழ் பெற்ற காமக்யா கோயில் அம்பு பாச்சி திருவிழாவில் பங்கேற்கும் நாகா சாதுக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

அசாமின் குவாஹாட்டியில் புராதன காமக்யா கோயில் அமைந்துள்ளது. சக்தி வழிபாடுகளில் உலகின் தலைசிறந்த கோயிலாக இது கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் வரும் ஸ்ரவண மாதத்தில் அம்பு பாச்சி திருவிழா நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு மிகுந்த இவ்விழா இந்த ஆண்டில் வரும் வரும் 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கு நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகள் மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் பலர் வருவதுண்டு. மேலும் பல்வேறு வகையான சாதுக்களும் இதில் பங்கேற்கின்றனர். அலகாபாத் கும்பமேளாவுக்கு அடுத்து அம்பு பாச்சி விழாவுக்கு முக்கியத்துவம் அளித்து நாகா சாதுக்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

நாகா சாதுக்கள், நாட்டின் முக்கியப் புண்ணியத் தலங்களின் விழாக்களில் மட்டும் கலந்து கொள்கிறார்கள். மற்ற நாட்களில் இவர்கள் மக்கள் கண்களுக்கு படாத வகையில் காடுகளில் வாழ் கிறார்கள். அலகாபாத் மற்றும் உஜ்ஜைனி கும்பமேளா ஊர்வலங் களில் நாகா சாதுக்கள் வாள்களை வீசிக்கொண்டு நடத்தும் காட்சி கள் பிரமிக்க வைப்பவை. இவற்றை காண வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். உடல் முழுக்க சாம்பலை மட்டுமே ஆடையாக பூசிக்கொள்ளும் நாகா சாதுக்கள், அபின், கஞ்சா போன்ற போதைப் பொருள்களையும் உட்கொள்கின்றனர். எனவே இவர்களுக்கு இந்தமுறை சில கட்டுப்பாடுகளை விதிக்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் காமக்யா கோயிலின் தலைமை பூசாரியான பபிந்திரா பிரசாத் சர்மா டொலாய் கூறும்போது, “திருவிழாவுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நாகா சாதுக் களைப் பார்க்கும்போது தர்ம சங்கடமான நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நாகா சாதுக்கள் முக்கிய பந்தல்களின் பாதைகளில் வராத வகையில் அவர்களைத் திருப்பி விட உள்ளோம். இந்தப் பகுதிகளில் அவர்களின் ஆன்மீக நடவடிக்கைகளையும் தவிர்த்து தனியாக இடம் ஒதுக்க இருக் கிறோம். கோயில் பகுதியில் இவர்களின் ஊர்வலத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இதுவரையில் நடந்த கும்ப மேளாக்களில் கூடிய நாகா சாதுக்கள் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு எதையும் செய்வதில்லை எனப் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் நாகா சாதுக்கள் இடையே கடும் எதிர்ப்புகளைக் கிளம்பி சர்ச்சையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த நாகா சாதுக்கள்?

ஜூனா அஹாடாவின் ஒரு கிளையினர் நாகா சாதுக்கள் என அழைக்கப்படுகின்றனர். சாதுக்களில் இவர்கள் போர் வீரர்களாகக் கருதப்படுகின்றனர். ம.பி. மாநிலத்தின் ஜுனாகர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியே இவர்களின் இருப்பிடமாகும். சுமார் 5 வயதிலேயே நாகா சாதுவுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதை முடித்தவர்களுக்கு, கும்ப மேளாக்களில் ‘நாகா சாது’ என பட்டம் சூட்டப்படுகிறது. போர்க் குணம் படைத்த இந்த நாகா சாதுக்கள், பெரும்பாலும் பொது மக்கள் முன்னிலையில் வராமல் மறைந்தே வாழ்கிறார்கள்.

கும்பமேளா சமயங்களில் மட்டும் மக்கள் முன்பு தோன்றுவார்கள். கும்பமேளாவின் முக்கியக் குளியல்களுக்கு முன்பாக நடைபெறும் ஊர்வலங் களில் நாகா சாதுக்களைப் பார்க்க பொதுமக்கள் குவிவது வழக்கம். இதில், நாகாக்கள் தங்கள் வாள்களை ஆக்ரோஷமாக வீசி வித்தை மற்றும் சண்டைகள் செய்துகாட்டியபடி செல்வார்கள். நாகாக்கள் தங்கள் போக சக்தியை குறைப்பதற்காக போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x