Published : 05 Nov 2013 09:11 AM
Last Updated : 05 Nov 2013 09:11 AM

நோட்டா வசதி: சட்டமன்றத் தேர்தலில் பிங்க், நாடாளுமன்றத்துக்கு வெள்ளை



நோட்டா வசதி: சட்டமன்றத் தேர்தலில் பிங்க் நாடாளுமன்றத்துக்கு வெள்ளை





மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் நோட்டா சின்னம் சட்டமன்றத் தேர்தலில் இளம் சிவப்பு (பிங்க்) நிறத்திலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெள்ளை நிறத்திலும் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



செவ்வக வடிவிலான பட்டனில் நோட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா என்பது பிங்க் நிறத்திலும் மக்கள வைத் தேர்தலில் வெள்ளை நிறத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக NOTA என்ற ஆங்கில எழுத்து சின்னங்களின் வரிசையில் இடம்பெறும். வேட்பாளர்கள் பெயர் வரிசைப் பட்டியல் கடைசியில், மேற்கண்ட யாரும் இல்லை என்ற வாசகம் அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம் பெறும். இந்தச் சின்னத்தை திங்கள்கிழமை இறுதி செய்த தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.



இதைத் தொடர்ந்து நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் சட்டமன்றத் தேர்தல்களில் நோட்டா வசதி அறிமுகப் படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த மாநிலங்களில் சுமார் 11 கோடி வாக்காளர்கள் நோட்டா வசதியுடன் தங்கள் வாக்குரிமையைச் செலுத்த உள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x