Last Updated : 16 Aug, 2016 08:36 AM

 

Published : 16 Aug 2016 08:36 AM
Last Updated : 16 Aug 2016 08:36 AM

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள் ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் 1 மற்றும் 16-ம் தேதிகளில் மாற்றி அமைக்கப்படுகிறது.

அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று இரவு அறிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x