Published : 27 Oct 2014 19:09 pm

Updated : 27 Oct 2014 19:09 pm

 

Published : 27 Oct 2014 07:09 PM
Last Updated : 27 Oct 2014 07:09 PM

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக தனித்துப் போட்டி

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி கண்ட பாஜக ஜம்மு-காஷ்மீர் மாநில தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது.

"எந்த ஒரு கட்சியுடனும் தேர்தலுக்கு முன் கூட்டணி கிடையாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 87 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தும்” என்று காஷ்மீர் மாநில பாஜக தலைவர் அவினாஷ் ராய் கன்னா தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருப்பதால் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

அவினாஷ் ராய் கன்னா மேலும் கூறும்போது, “வெற்றி பெற முடியக்கூடிய, மக்களுக்கு பணியாற்றக்கூடிய வேட்பாளரையே முன்னிறுத்துவோம். இன்று கட்சியின் தேர்தல் குழு கூடி வேட்பாளர்கள் பெயர்களைத் தேர்வு செய்யும்.

44 இடங்களுக்கு மேல் வென்று ஜம்மு காஷ்மீரிலும் ஆட்சி அமைப்போம், எங்களது கட்சி தேர்தல் அறிக்கை தெளிவாக இருக்கிறது. எங்களால் ஊழலற்ற, பயமற்ற, குடும்ப ஆட்சியற்ற ஒரு நல்லாட்சியை வழங்க முடியும். இந்த மாநில மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அவர்.


ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்பாஜகதனித்துப் போட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author