Published : 15 Oct 2014 11:15 AM
Last Updated : 15 Oct 2014 11:15 AM

கேரளத்தில் எதிர்க்கட்சி இளைஞரணி தலைவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இளைஞரணி தலைவர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகம் முன் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிரான மாநிலம் தழுவிய போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “முதல்வர் உம்மன் சாண்டியின் ஆட்சியில் ஊழலும், திறமை யின்மையும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. இந்த அரசு மக்களுக்கான தனது பொறுப்பு களை மறந்துவிட்டது. புதிய வரிவிதிப்பின் மூலம் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றார்.

“அரசுப் பணி நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும், புதிய வரிவிதிப்பு களை வாபஸ் பெற வேண்டும். அரசுப் பணியாளர் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டத்தை கைவிடவேண்டும்” என்பது உண்ணாவிரதம் இருக்கும் இளைஞரணி தலைவர்களின் கோரிக்கைகள் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x