Last Updated : 23 Jun, 2016 10:17 AM

 

Published : 23 Jun 2016 10:17 AM
Last Updated : 23 Jun 2016 10:17 AM

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மவுரியா விலகல்: எம்எல்ஏ சீட்டுகளை விற்பதாக மாயாவதி மீது புகார்

பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா நேற்று விலகினார். இது அக்கட்சிக்கு பெரும் பின் னடவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை யொட்டி, எம்எல்ஏ சீட்டுகளை ஏலத்தில் விடுவதாக மாயாவதி மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை யில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மவுரியா, பகுஜன் சமாஜி லிருந்து விலகியுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் 27-ம் தேதி அகிலேஷ் யாதவ் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவுள்ளார். 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக, அகிலேஷ் மேற்கொள்ளும் கடைசி அமைச் சரவை விரிவாக்கம் இதுவாக இருக்கும். அமைச்சரவையில் 4 இடங்கள் காலியாக இருப்பதால், மவுரியாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

“எனக்கு அங்கே மூச்சுத் திணறியது. இனியும் அக்கட்சியில் என்னால் நீடித்திருக்க முடியாது. அடுத்த ஆண்டு தேர்தலுக்காக, எம்எல்ஏ சீட்டுகளை மாயாவதி பகிரங்கமாகவே ஏலத்தில் விடுகிறார். சீட்டுகளை விற்பது மட்டுமின்றி, அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு ஏலத்தில் விடுகிறார். இது மோசமானது. நல்ல வேட்பாளர்களை அவர் தேர்வு செய்யவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்” என மவுரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாயாவதி கூறும் போது, “என்னுடைய ஆட்சியின் போது அமைச்சரவையில், மவுரியா இடம்பெற்றிருந்தார். கட்சியி லிருந்து விலகியதன் மூலம் மவுரியா கட்சிக்கு நன்மையை செய்திருக்கிறார்” என்றார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “அவர் தனக்கு மட்டு மின்றி, தனது மகள், மகனுக்கும் தேர்தலில் சீட் கேட்டார். அதை நிராகரித்து விட்டேன். அதில் அவருக்கு அதிருப்தி. நானே சில நாட்களில் அவரை நீக்குவதாக இருந்தேன். கட்சியிலிருந்து வெளியேறியதன் மூலம் அவர் நன்மை செய்திருக்கிறார். அவர் கட்சி தாவுவது வழக்கமானதுதான். கடந்த தேர்தலின்போது எம்எல்ஏ சீட்டுக்காக அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் எனக் கூற முடியுமா? ஒருவேளை சமாஜ்வாதி கட்சியில் அவருக்கும் அவரது மகன், மகளுக் கும் எம்எல்ஏ சீட் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x