

கொல்கத்தா: கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 16-ம் தேதி மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா தொடங்கியது. இதையொட்டி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 3,000-க்கும் மேற்பட்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
வடக்கு கொல்கத்தாவின் சார்பாகன் பகுதி முக்தாரம் பாபு சாலையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று மாலை துர்கா தேவியை வழிபட நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். குறுகலான சாலை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் முண்டியடித்ததால் இரும்பு, மரங்களால் அமைக்கப்பட்டிருந்த பந்தல் சரிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் சிக்கினர்.
கூட்ட நெரிசல், பந்தல் சரிந்ததில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.