இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான 100% வரியை வாபஸ் பெற்றார் ட்ரம்ப்

ட்ரம்ப்

ட்ரம்ப்

Updated on: 
2 min read

வாஷிங்​டன்: ரஷ்யா மீதான தடைகள் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டிருந்த கச்சா எண்​ணெய், எரி​வாயு கொள்​முதல் செய்​யும் நாடு​கள் மீதான தடைகள் மற்​றும் சுங்க வரி​களை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதனால் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​களின் பொருட்​கள் மீது விதிக்​கப்​பட​விருந்த 100 சதவீத வரி நீங்​கும்.

உக்​ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதி​ராக, ரஷ்​யா​வின் பொருளா​தா​ரத்தை முடக்க அமெரிக்கா பல்​வேறு நடவடிக்​கை​களில் இறங்கி உள்​ளது.

அதன் ஒரு பகு​தி​யாக, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட நாடு​களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழி​வகுக்​கும் சட்​டத்தை அமெரிக்கா கொண்டு வந்​தது.

அமெரிக்க செனட் சபை​யில் முக்​கிய பங்கு வகித்த மறைந்த செனட்​டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரில், ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்​றும் ஈரான் மீதான பொருளா​தா​ரத் தடைகள் சட்​டம் 2026’ என்ற பெயரில் இந்​தச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. கடந்த மாதம் இந்​தச் சட்​டத்​தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டார்.

இந்​தச் சட்​டத்​தின்​படி, ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் முக்​கிய நாடு​களான இந்​தி​யா, சீனா, ஸ்லோ​வாக்​கி​யா, ஹங்​கேரி, அஜர்​பைஜான் ஆகிய நாடு​களின் பொருட்​களுக்கு அமெரிக்​கா​வில் 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டது.

இந்த வரி விதிப்பு நடவடிக்​கைகள் அக்​டோபர் 18-ம் தேதி (இன்​று) முதல் அமலுக்கு வர இருந்​தன. இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் தேசிய நலன் கருதி இந்​தச் சட்​டத்​தின் கீழ் விதிக்​கப்பட வேண்​டிய பல்​வேறு பொருளா​தா​ரத் தடைகள், வர்த்​தகக் கட்​டுப்​பாடு​கள் மற்​றும் வரி​களைத் தற்​காலிக​மாக நிறுத்தி வைப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அதிபர் ட்ரம்​பின் இந்த உத்​தர​வால் சீனா, இந்​தியா உள்​ளிட்ட நாடு​களின் பொருட்​களுக்கு வரி விதிக்​கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்​துள்​ளது. நேற்று முன்​தினம் மாலை இந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

ரஷ்யா மீதான தடைகளை அமெரிக்கா ரத்து செய்​துள்​ளதை ரஷ்ய அதிபரின் தூது​வரும், பொருளா​தார ஆலோ​சகரு​மான கிரில் திமிட்​ரியேவ் வரவேற்​றுள்​ளார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “ரஷ்யா மீதான தடைகளை நீக்​கு​வதற்கு அமெரிக்க அதிபர் உத்​தர​விட்​டிருப்​பது வரலாற்​றுச் சிறப்​புமிக்க தருண​மாகும்.

தடை விதிக்​கும் சட்​டத்தை நிறுத்தி வைத்​திருப்​பதை நாங்​கள் வரவேற்​கிறோம். தடைகள் விதித்து மோதல் ஏற்​படு​வதற்​குப் பதிலாகப் பேச்​சு​வார்த்தை நடத்​தி, இரு தரப்​புக்​கும் பயனளிக்​கும் வகை​யில் ஒத்​துழைப்​புடன் நடந்து கொள்​வது அவசி​யம். உலகளா​விய நிலைத்​தன்​மைக்கு இரு நாடு​களின் கூட்​டுப் பொறுப்​பும் தேவை” என்​றார்.

ரஷ்​யா​விடம் இருந்து அமெரிக்கா எரிபொருள் வாங்​கு​கிறது. மேலும், அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ விரை​வில் இந்​தியா வரவிருக்​கிறார். அவரும் அமெரிக்கா​வுக்கு எரிபொருள் விநி​யோகம் குறித்து பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தச் சூழ்​நிலை​யில்​தான் சர்​வ​தேச கேள்வி​களை தவிர்க்க இந்​தியா மீதான 100 சதவீத வரி விதிப்பை ட்ரம்ப் ரத்து செய்​துள்​ள​தாக அரசி​யல் வல்​லுநர்​கள் கூறுகின்​றனர்​.

ஊடகச் செயலர் நீக்​கம்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை ஊடகச் செயல​ராக கேட்டி ஜக்​காரியா கடந்த 12-ம் தேதி பொறுப்​பேற்​றார். புதிய பொறுப்பை ஏற்று 5 நாட்​களே ஆன நிலை​யில் அவர் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். இது வெள்ளை மாளிகை செய்​தித் தொடர்​பாளர் வரலாற்​றிலேயே மிகக் குறுகிய காலப் பதவிக் கால​மாகக் கருதப்​படுகிறது.

<div class="paragraphs"><p>ட்ரம்ப்</p></div>
கொல்கத்தா துர்கா பூஜையில் கடும் நெரிசல்: 17 பேர் உயிரிழப்பு; 35 பேர் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in