Last Updated : 23 Feb, 2017 09:40 AM

 

Published : 23 Feb 2017 09:40 AM
Last Updated : 23 Feb 2017 09:40 AM

குடும்பத்தினரே ஏற்க மறுக்கும் நிலை ஏன்? - மனநலம் பாதித்து மீண்டவர்களின் மறுவாழ்வுக்கு திட்டம் வகுக்க வேண்டும்

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

“உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச் சைக்குப் பின் குணமடைந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மனநலக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி வழக்கறிஞர் ஜி.கே.பன்சால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி கள் சந்திரசூட், கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ‘‘மனநலம் பாதித்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்தாலும், அவர் களைக் குடும்பத்தினரே வீட்டுக்கு அழைத்துச் செல்ல தயாராக இல்லை. இந்த நிலை ஏன்? இந்தப் பிரச்சினை மிகமிக உணர்வுப் பூர்வமானது. நீங்கள் (மத்திய அரசு) இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்துங்கள்’’ என்றனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு கூறியதாவது:

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காப்பகத்தில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தால், அவர்களை அங்கு வைத்திருக்க கூடாது. அவர் கள் மீண்டும் இந்த சமுதாயத் துக்கு கொண்டுவரப்பட வேண் டும். இதற்காக மத்திய அரசு கொள் கைகளை வகுக்க வேண்டும்.

மனநலம் பாதித்து குணமடைந் தவர்களின் மறுவாழ்வுக்கு விதி முறைகள், மாதிரி திட்டங்களை எங்களிடம் தாருங்கள். நாங்கள் எல்லா மாநில அரசுகளுக்கும் உத்தரவிடுகிறோம். இந்தத் திட்டத்தை மிக எளிதாக செயல் படுத்த முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, ‘‘இந்த விஷயத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் சமூகநீதித் துறை அமைச்சகம் என இரண்டு அமைச்சகங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், கால அவகாசம் வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்ட நீதிபதிகள், மறுவாழ்வுக்கான விதிமுறைகள், மாதிரி திட்டங்களைச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x