Published : 28 Dec 2013 05:08 PM
Last Updated : 28 Dec 2013 05:08 PM

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி மாநிலத்தின் 7-வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், புதிய பொறுப்புகளை கையில் எடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதே போல் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும், டெல்லியின் புதிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நிலையான அரசு அமைத்து மக்களுக்கு கெஜ்ரிவால் சேவை செய்ய வேண்டும் என தான் வாழ்த்துவதாக வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x