Last Updated : 06 Aug, 2016 04:51 PM

 

Published : 06 Aug 2016 04:51 PM
Last Updated : 06 Aug 2016 04:51 PM

மகாராஷ்டிர மேம்பால விபத்து பலி 24 ஆக அதிகரிப்பு

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரிட்டன் கால சாவித்ரி நதி பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமையான இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

மஹத்தில் கடந்த செவ்வாயன்று நடந்த இந்த துயரகரமான விபத்தில் பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் வாகனங்கள் வெள்ள நீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

பலியான 24 பேர்களில் அடையாளம் தெரிந்த 22 பேர் ராஜாபூர்-போரிவிலி பேருந்தில் சென்றவர்கள், 7 பேர் மும்பை-ஜைகத் பேருந்தில் சென்றவர்கள். இரண்டு மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்துகள்.

சுமார் 20 படகுகள், கடலோரக்காவற்படையைச் சேர்ந்த 160 வீரர்கள் உட்பட பலரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளூர் மீனவர்களையும் மாவட்ட நிர்வாகம் உதவிக்கு அழைத்தது.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் மாநில முதல்வர் பட்னாவிஸ்.

2 அரசுப்பேருந்துகள் தவிர, ஒரு டவேரா, ஒரு ஹோண்டா சிட்டி காரும் நீரில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x